மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷா, கடந்த 11 ஆம் தேதி தமிழகத்திற்கு வருகை புரிந்திருந்தார். 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள பாஜகவின் ஆட்சியை குறித்த சாதனைகளை விளக்கும் வகையில் அமித்ஷா பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார். அந்த வகையில்தான் சமீபத்தில் தமிழகம் வந்திருந்தார்.
அமித்ஷாவை சந்தித்த ஜிவி பிரகாஷ்
கடந்த 10 ஆம் தேதி இரவு சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கிய அமித்ஷா, கிண்டியில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் தங்கியிருந்தார். அப்போது பல்வேறு துறையை சேர்ந்த பல பிரபலங்கள் அவரை சந்தித்தனர். இதில் சினிமாத்துறையில் இருந்து இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார், தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், இயக்குனர் ஆர்.கே.செல்வமணி ஆகியோர் அமித்ஷாவை சந்தித்தனர்.
இந்த நிலையில் பிரபல மூத்த பத்திரிக்கையாளரான வலைப்பேச்சு பிஸ்மி, இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷிடம், அமித்ஷாவை சந்தித்தது குறித்து தொலைப்பேசியில் கேட்டாராம். அப்போது ஜிவி பிரகாஷ், அமித்ஷாவிடம் தான் கலந்துரையாடிய விஷயத்தை குறித்து பிஸ்மியிடம் கூறினாராம். ஜிவி பிரகாஷ் கூறிய தகவலை தனது வலைப்பேச்சு வீடியோவில் பிஸ்மி பகிர்ந்துகொண்டுள்ளார்.
தமிழ் மேல கை வைக்காதீங்க
அதாவது அமித்ஷாவை சந்தித்த ஜிவி பிரகாஷ், “தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதில் நீங்கள் கைவைக்க கூடாது” என்று கோரிக்கை வைத்தாராம். மேலும் பெரும்பாலான விமானங்களில் பயணிக்கும்போது வழிகாட்டுதல்களை தமிழில் கேட்கமுடியவில்லை, ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும்தான் கேட்க முடிகிறது என்று கூறினாராம். தமிழ் மொழிக்கும் தமிழ் இனத்திற்கும் எந்த ஒரு பிரச்சனையும் வரக்கூடாது என்று அமித்ஷாவிடம் ஜிவி பிரகாஷ் கூறினாராம்.
அதே போல் “நீங்கள் புதிய கல்விக்கொள்கையை திணிக்கிறீர்கள். ஆனால் இங்கே பள்ளிக்கூடங்களில் அடிப்படை கட்டமைப்பே இல்லை” என்றும் ஜிவி பிரகாஷ் அமித்ஷாவிடம் கூறினாராம். இவ்வாறு ஒரு தகவலை பிஸ்மி பகிர்ந்துகொண்டுள்ளார். ஜிவி பிரகாஷ், அமித்ஷாவிடம் வைத்துள்ள கோரிக்கைகளை பார்த்து ரசிகர்கள் அரண்டுபோயுள்ளார்களாம்.
இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் பாட்டை எழுத முடியாமல் திணறிய வாலி!.. ஒரே நிமிடத்தில் கலைஞர் செய்த வேலை…
சொர்க்கவாசல் படத்தின்…
Lokesh kanagaraj:…
தனுஷ் தயாரிச்ச…
மருத்துவராக இருந்தாலும்…
ஆர் ஜே…