கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் கடும் விவாதங்களை எழுப்பிய ஜிவி பிரகாஷ் – சைந்தவி விவாகரத்து சர்ச்சை ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் மற்றும் இளம் நடிகராக வலம்வந்து கொண்டிருப்பவர் ஜிவி பிரகாஷ். சமீபத்தில் இவரது நடிப்பில் டியர், கள்வன், ரெபெல் ஆகிய படங்கள் வெளியாகின.
அடுத்ததாக இவரது இசையில் தங்கலான், வணங்கான், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், வீர தீர சூரன், அமரன் ஆகிய படங்கள் வெளியாக இருக்கின்றன.
இதேபோல இவரது மனைவி சைந்தவியும் பாடகி தான். பள்ளிப்பருவத்தில் நண்பர்களாக இருந்த இருவரும் பின்னர் காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு நான்கு வயதில் அன்வி என்ற மகள் இருக்கிறார். இந்த நிலையில் தங்களது 11 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்ததாக இருவரும் சமூக வலைதளங்களில் சற்றுமுன் அறிவித்து உள்ளனர்.
இதுகுறித்து ஜிவி பிரகாஷ், ” நானும், சைந்தவியும் 11 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு பிரிய முடிவு செய்திருக்கிறோம். ஒருவர் மீது ஒருவர் நாங்கள் வைத்திருக்கும் பரஸ்பர மரியாதை அப்படியே நீடிக்கும்.
மிகவும் தனிப்பட்ட இந்த மாற்றத்தின் போது எங்களுடைய தனியுரிமையை மதித்து, புரிந்து கொள்ளுமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம்.
இது எங்கள் இருவருக்கும் சிறந்த முடிவாக இருக்கும் என்று நம்புகிறோம். இந்த கடினமான காலகட்டத்தில் உங்களுடைய புரிதலும், ஆதரவும் எங்களுக்கு மிகவும் முக்கியம். நன்றி”, என தெரிவித்து உள்ளார்.
இதேபோல சைந்தவியும் தன்னுடைய சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். நாக சைதன்யா – சமந்தா, தனுஷ் – ஐஸ்வர்யா என சமீபகாலமாக முன்னணி நட்சத்திரங்கள் விவாகரத்து செய்து வருகின்றனர்.
அந்த லிஸ்டில் தற்போது ஜிவி-பிரகாஷ் – சைந்தவி நட்சத்திர ஜோடியும் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களின் இந்த முடிவு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்க நாதன் நடித்து வருகிற 10ம் தேதி வெளியாகும் படம் எல்ஐகே. தொடர்ந்து ஹாட்ரிக்ல்…
Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த…
Anitha Sampath: செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் தற்போது சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் தற்போது…
தமிழக அரசியல் களம் தற்போது பரபரபான கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல கட்சிகள் பரப்புரையில் பிஸியாக இருந்து…
Cook with comali 7: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியின் முதல்…