சினிமாவில் ஜி.வி.பிரகாஷ் பாடிய டாப் ஹிட் ரஜினிகாந்த் பாடல்... அதுவும் 8 வயசிலங்க...
தமிழ் இசையமைப்பாளர்களில் பிரபலமானவர் ஜி.வி.பிரகாஷ் இவர் தனது சிறு வயதிலேயே பல ஹிட் பாடல்களை பாடி இருக்கிறார். அதிலும் ரஜினியின் இந்த ஹிட் பாடலில் வந்தது இவர் வாய்ஸ் தான் என்ற சுவாரஸ்ய தகவல் வெளியாகி இருக்கிறது.
இசைபுயல் ஏ.ஆர்.ரஹ்மானின் அக்கா ஏ.ஆர்.ரஹானா. இவர் மகன் தான் ஜி.வி.பிரகாஷ். தமிழ் சினிமாவில் வெயில் படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். முதல் படமே மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது மட்டுமல்லாமல் இவரின் பாடல்களுக்கு நல்ல ரீச் கிடைத்தது.
தொடர்ச்சியாக அஜித் நடிப்பில் கிரீடம் படத்திற்கு இசையமைத்தார். அப்படமும் மிகப்பெரிய வெற்றியினை பெற்றது. தொடர்ச்சியாக ஜி.வி.பிரகாஷ் பல ஹிட் படங்களுக்கு இசையமைத்திருந்தார். தற்போது நடிப்பிலும் கவனம் செலுத்து வந்தாலும், ஜி.வி.யின் பாடல்களுக்கு தனி ரசிகர்கள் இன்னமும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
இந்நிலையில், ஜி.வி. தனது 8 வயதில் ரஜினிகாந்தின் முத்து படத்தில் பாடி இருக்கிறார். குலுவாலிலே முத்து வந்தல்லோ பாடலில் முதல் சில நொடிகள் மாஸ்டர் மகேந்திரன் சில வரிகளை பாடி இருப்பார். அதனை ஜி.வி.பிரகாஷ் தான் பாடி இருந்தாராம். இதற்கு முன்னரே, தனது 6 வயதில் ஜென்டில்மேன் படத்தில் வரும் ஜிக்குபுக்கு ரயிலே பாடலுக்கு சில வரிகள் பாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.