ஏற்கெனவே வாங்கிய அடி பத்தாதா? மீண்டும் எமனுகிட்ட ஆசி வாங்க ஆசைப்படும் ஜிவி - இப்படி ஒரு முடிவா?

by Rohini |
pra
X

pra

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி இன்று ஒரு வளரும் நடிகராக இருப்பவர் ஜி வி பிரகாஷ். இவருடைய நடிப்பை பற்றி பேசுவதற்கு முன் இவருடைய இசை இவரைப் பற்றி பல பெருமைகளை பறைசாற்றி இருக்கிறது. இவருடைய இசையில் ஏகப்பட்ட பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியிருக்கின்றன. இப்போது நடித்துக் கொண்டிருந்தாலும் ஒரு பக்கம் இசையையும் அவர் விட்ட பாடு இல்லை.

இந்த நிலையில் ஜிவி பிரகாஷ் நடித்து 25வது படத்தை நெருங்கி இருக்கிறார். அந்தப் படத்தை மிகப்பெரிய அளவில் எடுக்க வேண்டும் என திட்டமிட்டு இருக்கிறாராம் ஜிவி பிரகாஷ். சினிமாவைப் பற்றி ஒரு புரிதல் வருவதற்கு உள்ளாகவே ஜி.வி பிரகாஷ் தயாரிப்பில் ஈடுபட்டார். கதிரை வைத்து மதயானை கூட்டம் என்ற படத்தை முதன்முதலாக தயாரித்தார் ஜிவி பிரகாஷ்.

pra1

pra1

அந்தப் படம் நேர்மறையான விமர்சனங்களை பெற்றாலும் அந்தப் படத்தின் மூலம் ஜிவி பிரகாஷ் ஒரு மோசமான அனுபவத்தை பெற்றார் என்று வலைப்பேச்சு பிஸ்மி கூறினார். அந்தப் படத்தில் ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்தித்தாராம் ஜிவி பிரகாஷ். அதிலிருந்தே இனிமேல் தயாரிப்பு பணியை தொடவே கூடாது என்ற முடிவில் இருந்தாராம்.

இதையும் படிங்க :அடேய் எப்பா.. போதும்டா சாமி! சங்கர் சொன்ன ஐடியாவால் காண்டான உதயநிதி – ‘இந்தியன்2’ வில் ரணகளம்

ஆனால் தன்னுடைய 25ஆவது படத்தை அவரே தயாரித்து அதில் நடிக்கவும் செய்கிறாராம். அதுமட்டுமில்லாமல் அந்தப் படத்தை மூன்று பாகங்களாக எடுக்க வேண்டும் என்ற திட்டத்திலும் இருக்கிறாராம். படத்திற்கு கேமராமேன் நீரவ் ஷா என்று சொல்லப்படுகிறது.

pra2

pra2

அப்படி இருக்கும்போது படத்தை இயக்கும் பொறுப்பை ஒரு பெரிய இயக்குனரிடம் ஒப்படைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒரு புதுமுக இயக்குனரை வைத்து படத்தை இயக்க திட்டமிட்டு இருக்கிறாராம் ஜிவி பிரகாஷ். எதுக்கு இந்த வேண்டாத வேலையை பார்க்கிறார் ஜிவி பிரகாஷ் என்று கோடம்பாக்கத்தில் புலம்பி வருகிறார்கள்.

இதையும் படிங்க : ‘கொலை’ படத்தை கொலை செய்றாரேனு நினைச்சோம்! புரோமோஷனுக்கு ஆர்யா வந்ததன் பின்னனி இதுதானா?

Next Story