அந்த நடிகருக்காகவே எழுதினேன். ஆனா சிம்பு நடிச்சார்!. விடிவி ரகசியம் சொன்ன கவுதம் மேனன்!…
தமிழ் சினிமாவில் ஸ்டைலீஸ் இயக்குனராக வலம் வருபவர் கவுதம் மேனன். மின்னலே படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமனார். அதன்பின் சூர்யா - ஜோதிகாவை வைத்து அவர் இயக்கிய காக்க காக்க திரைப்படம் அவருக்கு ரசிகர்களை பெற்று தந்தது. சூர்யாவை பக்கா ஆக்ஷன் ஹீரோவாக மாற்றியது இந்த படம்தான். அதன்பின் வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், விண்ணை தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா, வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட சில படங்களை இயக்கினார்.
அதேநேரம், இவர் இயக்கிய சில திரைப்படங்கள் இன்னும் கிடப்பில் கிடக்கிறது. இவர் இயக்கத்தில் விக்ரம் நடித்த துருவ நட்சத்திரம் இதுவரை வெளியாகவில்லை. அதேபோல், ஜோஸ்வா இமை போல் காக்க என்கிற படமும் இதுவரை ரிலீஸ் ஆகவில்லை.
கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு - திரிஷா நடித்து வெளியான விண்ணை தாண்டி வருவாயா திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. சிம்பு, திரிஷா ஆகிய இருவருக்கும் இந்த திரைப்படம் கம்பேக் படமாக இருந்தது. ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் இப்படத்தின் பாடல் மனதை வருடும் படி அமைந்திருந்தது.
இந்நிலையில், சமீபத்தில் பேட்டியளித்த கவுதம் மேனன் ‘தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவை வைத்து நான் ஒரு படம் இயக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. எனவே, அவருக்காக ஒரு கதை எழுத துவங்கினார். அவர் ஆக்ஷன் படங்களில் நடிப்பவர். ஆனால், எனக்கு காதல் கதைதான் மனதுக்கு தோன்றியது. கதை யோசித்த போது ‘இந்த உலகத்துல இவ்வளவு பொண்ணுங்க இருந்தும் நான் ஏன் ஜெர்சிய லவ் பண்ணேன்’ என்கிற வசனத்தைதான் முதலில் எழுதினேன். மகேஷ்பாபு அந்த கதையில் நடிக்க விரும்பவில்லை. அதன்பின்னர்தான் அந்த படத்திற்குள் சிம்பு வந்தார்’ என கவுதம் மேனன் கூறினார்.
சிம்புவை வைத்து மூன்று திரைப்படங்களை கவுதம் மேனன் இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கெட்ட பழக்கமெல்லாம் ஒன்னுமில்ல!.. வேற ஏதோ நடந்துபோச்சு!.. விஜயகாந்த் பற்றி உருகும் சந்திரசேகர்…