கைவசம் நிறைய வச்சுருக்காரு போல.. அஜித் செய்யாததை தனுஷை வைத்து நிறைவேற்றப்போகும் எச்.வினோத்!..
துணிவு படத்தின் வெற்றி எச்.வினோத்தின் பெருமையை தூக்கி நிறுத்தி விட்டது. லோகேஷுக்கு எப்படி ஒரு விக்ரம் அமைந்ததோ அதே போல் எச்.வினோத்திற்கு துணிவு படம் ஒரு வெற்றி மாலையாக மாறி நிற்கிறது. இதன் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு நிலையான இடத்தை பிடித்திருக்கிறார் எச்.வினோத்.
அந்தந்த காலகட்டத்தில் நடக்கும் அநீதிகளை சரியான முறையில் காட்சியமைத்து கொடுப்பதில் கில்லாடியாக இருக்கிறார் எச்.வினோத். அவர் எடுத்த சதுரங்கவேட்டை படத்திலும் ஈமு கோழி பிரச்சினை, இரிடியம் சம்பந்தப்பட்ட பிரச்சினைஎன சமூகத்தில் நடக்கும் அவலங்களை தெள்ளத்தெளிவாக காட்டியிருந்தார்.
அதே போல் துணிவு படத்திலும் இன்சூரன்ஸ், கிரடிட் கார்டு போன்றவற்றால் மக்கள் எந்த அளவுக்கு பாதிக்கப்படுகிறார்கள், இனிமேல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை தெளிவாக கூறியிருந்தார். இந்த நிலையில் தன் அடுத்த படத்திற்கான அப்டேட்டை சமீபத்தில் அளித்து வரும் பேட்டியின் மூலம் கூறிவருகிறார் எச்.வினோத்.
இதையும் படிங்க : அவமானப்படுத்திய ஹவுஸ் ஓனர்!.. வளர்ந்த பின் நடிகர் சூரி என்ன செய்தார் தெரியுமா?…
அடுத்ததாக யோகிபாபுவை வைத்து ஒரு படம் இயக்க இருக்கிறார். அதனை அடுத்து தனுஷுடன் இணைய இருப்பதாக அவரே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். அதுவும் சதுரங்கவேட்டை படத்தின் கதையில் இருந்து சின்ன சாராம்சத்தை எடுத்து தான் தனுஷை வைத்து படம் பண்ணப் போகிறாராம்.
ஏற்கெனவே இந்த கதையை தான் அஜித்திடம் சொல்ல அஜித் வேண்டாம் வினோத், இது நான் பண்ணா தப்பாக மாறிவிடும் என கூறி துணிவு படக்கதையை தேர்ந்தெடுத்தாராம் அஜித். அஜித் வேண்டாம் சொன்ன கதையை தான் தனுஷ் பண்ணப் போகிறார் என்ற தகவல் வெளியகியுள்ளது.
அது கண்டிப்பாக பெண்கள் இன்டர்நெட் மூலம் எந்த அளவுக்கு சீரழிகிறார்கள் அல்லது வேறு கதையாக இருக்கலாம். அதற்கு சரியான ஆளு தனுஷ்தான் என்று பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு அவர் அளித்த பேட்டியில் கூறினார்.