இந்த தடவ அஜித் வேண்டாம்.! வினோத் எடுத்த விபரீத முடிவு.!

அஜித் நடிப்பில் நேற்று முன்தினம் வெளியான வலிமை திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. தீரன் படத்தை எதிர்பார்த்து வந்தவர்களுக்கு வலிமை சற்று ஏமாற்றமே. இது வழக்கமான அஜித் நடிக்கும் ஆக்சன் கமர்சியல் படம் போல அமைந்துவிட்டது. மற்றபடி படம் 3 மணி நேரம் நன்றாக செல்கிறது.
இப்படத்தை அடுத்து மீண்டும் அஜித்தை நாயகனாக வைத்து அஜித்தின் 61வது திரைப்படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தை வலிமை போல இழுத்தடிக்காமல், சுருக்கமாக ஷூட்டிங்கை முடிக்க மொத்த படக்குழுவும் திட்டமிட்டுள்ளதாம்.
இதையும் படியுங்களேன் - இதெல்லாம் நாங்க சிம்பு படத்துலேயே பார்த்துட்டோமே.! வேற கதை சொல்லுங்க சிவகார்த்திகேயன்.!
அந்த படம் முடிந்ததும் வினோத் , ஏற்கனவே பேசப்பட்டது போல, விஜய் சேதுபதியை நாயகனாக வைத்து புதிய படத்தை இயக்க திட்டமிட்டுள்ளாராம். இந்த படத்தையும் போனி கபூர் தயாரிக்க உள்ளாராம். இப்படத்தில் யோகி பாபு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளாராம்.
விஜய் சேதுபதி, யோகி பாபு இருவரும் தமிழ் சினிமாவில் மிகவும் பிஸியான நடிகர்கள். அவர்களை வைத்து கால்ஷீட் சொதப்பாமல் குறித்த தேதியில் முடிப்பது கடினம் என அனுபவஸ்தர்கள் கூறி வருகின்றனர். எது இப்படியோ முதலில் அஜித்தின் 61வது திரைப்படம் முடிந்தால் தான் விஜய் சேதுபதி படத்தை பற்றிய தகவல் வெளிவரும்.