ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த அஜித்தின் “துணிவு” திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. “துணிவு” திரைப்படத்தை ஹெச். வினோத் இயக்க போனி கபூர் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளார்.
அஜித்குமார்-ஹெச்.வினோத்-போனி கபூர் ஆகியோர் இணைந்து இதற்கு முன் “நேர்கொண்ட பார்வை”, “வலிமை” ஆகிய திரைப்படங்களை உருவாக்கியிருந்தனர். ஆனால் இந்த இரண்டு திரைப்படங்களும் ரசிகர்களை அவ்வளவாக கவரவில்லை. இந்த நிலையில் “துணிவு” திரைப்படம் ஓரளவு நல்ல வரவேற்பையே பெற்றுள்ளது.
“மங்காத்தா” திரைப்படத்திற்குப் பிறகு முழுக்க முழுக்க வில்லத்தனமான நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார் அஜித். அஜித்தின் ஒவ்வொரு அசைவும் பட்டாசாக இருக்கிறது.
படம் முழுவதிலும் அஜித்தின் ராஜ்ஜியமே. துப்பாக்கி பிடிக்கும் ஸ்டைலிலும், வசனங்களிலும், நடை, உடை, பாவனை என எல்லா விஷயத்திலும் மிரட்டலாக வலம் வருகிறார் அஜித். இதற்கு முன் பல திரைப்படங்களில் அஜித் வெளிப்படுத்திய மேனரிசங்களை “துணிவு” திரைப்படத்தில் கொஞ்சம் மாற்றியமைத்திருக்கிறார் இயக்குனர் ஹெச்.வினோத்.
இதையும் படிங்க: சிக்ஸ் அடிக்குற மாதிரி போய் இப்படி டொக் வச்சிட்டாரே விஜய்… “வாரிசு” விமர்சனம் இதோ…
இந்த நிலையில் “துணிவு” திரைப்படம் குறித்த ஒரு சுவாரஸ்யமான தகவல் தற்போது வெளிவந்துள்ளது. அதாவது ஹெச்.வினோத் இயக்கிய “தீரன் அதிகாரம் ஒன்று” திரைப்படத்தை பார்த்த அஜித்குமாருக்கு, அப்படம் மிகவும் பிடித்துப்போனதாம். இதனை தொடர்ந்து ஹெச்.வினோத்தை நேரில் அழைத்த அஜித்குமார், “எனக்காக கதை வைத்திருக்கிறீர்களா?” என கேட்டுள்ளார்.
அதற்கு ஹெச்.வினோத் “துணிவு” திரைப்படத்தின் கதையை கூறியிருக்கிறார். அந்த நேரத்தில்தான் போனி கபூர், ஹிந்தியில் வெளியான “பிங்க்” திரைப்படத்தின் ரீமேக் உரிமையை வாங்கியிருந்தாராம். அத்திரைப்படத்தை இயக்குவதற்காக இயக்குனரை தேடிக்கொண்டிருந்தபோதுதான் ஹெச்.வினோத்தை சந்தித்திருக்கிறார் போனி கபூர். அவ்வாறுதான் “நேர்கொண்ட பார்வை” திரைப்படம் உருவாகியிருக்கிறது. ஒரு வேளை “நேர்கொண்ட பார்வை” படத்தை உருவாக்காமல் இருந்திருந்தால் அப்போதே “துணிவு” திரைப்படம் வெளிவந்திருக்குமாம்.
Vijay: ஃபெங்கால்…
நடிகர் ரஜினிகாந்தின்…
நடிகர் விஜய்…
Nayanthara: நடிகை…
Pushpa 2:…