அப்படியா...! உலகநாயகனுக்கு சொன்ன கதையா இது...? அதே தீப்பந்தம் இப்ப தளபதி கையில..!

by ramya suresh |   ( Updated:2024-09-14 13:44:58  )
அப்படியா...! உலகநாயகனுக்கு சொன்ன கதையா இது...? அதே தீப்பந்தம் இப்ப தளபதி கையில..!
X

#image_title

தளபதி 69 திரைப்படத்தின் அப்டேட் வெளியான நிலையில் அது எச் வினோத் கமலஹாசனை வைத்து இயக்க இருந்த திரைப்படத்தின் கதை தானா இது? என்று கூறி வருகிறார்கள்.

நடிகர் விஜய்யின் திரைப்படங்கள் என்றாலே ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடுவார்கள். அவர் படத்தின் அப்டேட்டிற்கு கூட ஒரு கொண்டாட்டம் இருக்கும். அதிலும் அவரின் கடைசி திரைப்படம் என்றால் சொல்லவா வேண்டும். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் தளபதி 69 திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியிருக்கின்றது .

நடிகர் விஜய் மற்றும் ஹெச் வினோத் கூட்டணியில் உருவாக இருக்கும் படத்தின் மோஷன் போஸ்டரை கேவிஎன் ப்ரொடக்சன் நிறுவனம் வெளியிட்டு இருக்கின்றது. இந்த திரைப்படத்தை ஹச் வினோத் தான் இயக்கப் போகிறார் என்பது உறுதியாகிவிட்டது. மேலும் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க இருக்கின்றார்.

தளபதி 69 படத்தின் அறிவிப்பை நன்றாக பார்த்தால் அதில் ஜெகதீஷ் பழனிசாமி தான் படத்தின் துணை தயாரிப்பு என்று போட்டிருக்கிறார்கள். நடிகர் விஜய்யின் சோசியல் மீடியா அட்மின்னாக இருந்த ஜெகதீஷ் பழனிசாமியை விஜய் தயாரிப்பாளராக மாற்றி இருக்கின்றார். ஜெகதீஷ் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ரிவால்டர் ரீட்டா படத்தை தயாரித்து வருகின்றார். இந்த நிறுவனம்தான் தற்போது கேவிஎன் நிறுவனத்துடன் இணைந்து தளபதி 69 திரைப்படத்தை தயாரிக்க இருக்கின்றது.

மேலும் அடுத்த ஒரு புதிய தகவலும் வெளியாகி இருக்கின்றது. அதாவது கமலஹாசன் மற்றும் ஹெச் வினோத் கூட்டணியில் உருவாக இருந்த KH233 வது திரைப்படத்தின் கதையில்தான் நடிகர் விஜய் நடிக்கப் போகிறார் என்ற புதிய செய்தி வலம் வருகின்றது. ஹச் வினோத் இயக்கப் போவதாக வெளியான அறிவிப்பில் கமலஹாசன் கையில் தீப்பந்தத்தை ஏந்தி இருப்பார்.

அந்த தீப்பந்தத்தை கமலஹாசன் கையில் இருந்து வாங்கி விஜய் கையில் கொடுத்து விட்டாரா எச் வினோத்? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். எச் வினோத் இயக்கத்தில் ரசிகர்களை அதிக கவர்ந்த படம் என்றால் அது சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று. அஜித்தை வைத்து அவர் மூன்று படங்கள் இயக்கிய போதிலும் பெரிதளவு ரசிகர்களை கவரவில்லை என்று தான் கூற வேண்டும்.

இப்படி இருக்கையில் விஜய்க்கு அவர் நல்ல ஒரு வெற்றி படத்தை கொடுப்பாரா? என நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அது மட்டும் இல்லாமல் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது முதலே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கின்றது.

Next Story