Ajith H.Vinoth: அஜித்தை பொருத்தவரைக்கும் ஒரு படம் ஹிட் அடித்துவிட்டால் அதே இயக்குனருடன் தொடர்ந்து மூன்று படங்களில் நடிக்க கால்ஷீட் கொடுப்பார் என்ற பொதுவான செய்தி இருக்கின்றது. அந்த வகையில் சிறுத்தை சிவாவுடன் தொடர்ந்து மூன்று படங்களில் பணியாற்றினார் அஜித். அதேபோல் எச் வினோத்துடன் சேர்ந்து தொடர்ந்து மூன்று படங்களில் பணியாற்றினார்.
வலிமை, துணிவு, நேற்கொண்ட பார்வை என தொடர்ந்து வினோத் இயக்க அஜித் அந்த படத்தில் நடித்து கொடுத்தார். இப்போது அஜித் குட் பேட் அக்லி திரைப்படத்திலும் விடாமுயற்சி திரைப்படத்திலும் பிஸியாக நடித்து வருகிறார். இந்த இரு படங்களுக்குப் பிறகு அஜித் யாருடன் இணையப் போகிறார் என்ற ஒரு கேள்வி அனைவரும் மத்தியில் இருந்து வருகிறது.
இதையும் படிங்க: கமலுக்கும் ஷங்கருக்கும் முரண்பாடு… ஆனா அவருக்கிட்ட அது இல்லையே…? என்னய்யா இங்க நடக்குது?
அதுமட்டுமில்லாமல் சிறுத்தை சிவா அல்லது வினோத் இவர்கள் கண்டிப்பாக அஜித்தின் அடுத்த படத்தை இயக்க வாய்ப்பு இருக்கிறது என்ற ஒரு தகவலும் பரவிக் கொண்டு வருகிறது. இதற்கிடையில் ஹெச் வினோத் விஜயின் 69 ஆவது படத்தை இயக்கப் போகிறார் என்ற செய்தி அனைவருக்கும் தெரிந்ததுதான். ஆனால் அதற்கு முன்பாகவே தனுஷை வைத்து லலித் தயாரிப்பில் ஒரு படம் பண்ண போவதாகவும் தகவல் வெளியானது.
இந்த நிலையில் பேஷன் ஸ்டுடியோ சுதன் எச் வினோத்தை அணுகி சிவகார்த்திகேயனுக்காக ஒரு படத்தை இயக்க சொன்னதாகவும் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் சில தினங்களுக்கு முன்பு தான் சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து படம் பண்ணுவதாக ஒரு அக்ரிமெண்டில் கையெழுத்தும் போட்டிருக்கிறாராம் எச் வினோத்.
இதையும் படிங்க: எம்ஜிஆருக்குத் தெரியாமல் கல்யாணம் செய்த வாலி… அப்புறம் சமாதானம் செய்தது எப்படி தெரியுமா?
அந்த அக்ரிமெண்டில் ஹெச் வினோத் ‘விஜயின் படத்தை முடித்துவிட்டு அதன் பிறகு தனுஷ் படத்தையும் முடித்துவிட்டு அடுத்ததாக தான் சிவகார்த்திகேயனுக்காக படம் பண்ண முடியும்’ என கூறியிருக்கிறாராம். இதற்கு இடையில் அஜித் என்னை அழைத்தால் தனுஷுக்கு பிறகு அஜித் படத்தை முடித்துவிட்டு தான் இந்த படத்திற்கு வர முடியும் என்றும் அந்த அக்ரிமெண்டில் கூறியிருக்கிறாராம் எச் வினோத்.
ஆக மொத்தம் எச் வினோத் கைவசம் கிட்டத்தட்ட நான்கு படங்கள் இருப்பதாக தெரிகிறது. சமீபகாலமாக அவருடைய கிராஃப்பும் ஏறிக்கொண்டே தான் போகிறது. அதனால் கொஞ்சம் யோசித்து தான் முடிவை எடுத்திருக்கிறார் எச் வினோத் என்று கோடம்பாக்கத்தில் கூறி வருகிறார்கள். மேலும் அவரின் வளர்ச்சிக்கு அஜித்தும் ஒரு வகையில் காரணமாக இருந்திருக்கிறார்.
இதையும் படிங்க: படுக்கையில் ஷாலினி!. கையை பிடித்தபடி அஜித்!.. செம ரொமான்ஸ் போங்க!.. வைரல் பிக்!…
தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…
தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…
லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…
சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…
Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…
Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…