H.வினோத் இயக்கத்தில் கமல்ஹாசன்.. விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு.! வெறித்தனமான கதைக்களம்.!

by Manikandan |
H.வினோத் இயக்கத்தில் கமல்ஹாசன்.. விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு.! வெறித்தனமான கதைக்களம்.!
X

ஆல் டைம் பிளாக்பஸ்டர் 'விக்ரம்' படத்தைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள 'இந்தியன் 2' படத்தின் வேலைக்காக கமல்ஹாசன் அமெரிக்காவிற்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. மேலும், இந்த மாத இறுதிக்குள் இந்தியா திரும்பி, செப்டம்பரில் படத்தின் படப்பிடிப்பைத் தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

kamal1_cine

இப்போது, கமலின் அடுத்த பட இயக்குனர் குறித்த தகவல் இணையத்தில் தீயாக பரவி வருகிறது. அதாவது, கமல்ஹாசன் தனது அடுத்த படத்திற்காக மகேஷ் நாராயணன் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக உறுதியான நிலையில், இதனை தொடர்ந்து யாருடன் இணைவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

இப்பொது, ஒரு சூப்பர் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. கமல்ஹாசன் தனது அடுத்த படத்திற்காக இயக்குனர் எச். வினோத்துடன் இணையப்போவதாக கூறப்படுகிறது. இது குறித்த ஒரு தகவலின் படி, அரசியல் பின்னணியில் அமைக்கப்பட்ட ஒரு திரைக்கதையை கமலிடம் வினோத் கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இதையும் பிடிங்களேன் - இதெல்லம் என் பொண்டாட்டி பாக்காம இருந்தா சரி.. மேடையில் அசடு வழிய உளறி கொட்டிய ‘வந்தியத்தேவன்’ கார்த்தி…

ஒருவேளை கமல் இதற்கு ஓகே சொன்னார் என்றால், இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும். இதற்கிடையில், எச். வினோத் தற்போது தனது வரவிருக்கும் திரைப்படமான 'AK 61' படப்பிடிப்பில் ஈடுபட்டு வருகிறார். அவர் மூன்றாவது முறையாக அஜித் குமார் மற்றும் போனி கபூருடன் இணைந்துள்ளார் என்பது குறிப்படத்தக்கது.

Next Story