மொட்டை தலையுடன் அதிர்ச்சி கொடுத்த பிரபல நடிகை... அதிர்ந்து போன ரசிகர்கள்....
தெலுங்கு சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்தவர் ஹம்ச நந்தினி. பல திரைப்படங்கள் சிறப்பு வேடத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர். தமிழில் கூட நான் ஈ படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார். இவரின் நடிப்பில் 2018ம் வருடம் பாந்தம் என்கிற தெலுங்கு படம் வெளியானது.
அதன்பின் அவர் திரைப்படங்களில் நடிக்கவில்லை. அவருக்கு மார்பக புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு பல முறை கீமோ தெரபி சிகிச்சை செய்ததால் அவரின் தலைமுடி கொட்ட துவங்கியது. எனவே, தற்போது அவருக்கு தலை முடியை அகற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பான புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ‘ இதற்காக நான் ஓய்ந்து போய்விட மாட்டேன். இந்த நோயை எதிர்த்து போராடுவேன்’ என நம்பிக்கையுடன் பதிவிட்டுள்ளார்.
இதையடுத்து, திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் என பலரும் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.