ஹன்சிகாவுக்கு விரைவில் டும்டும்டும்!..மாப்பிள்ளை யாருனு தெரியுமா?..
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. தெலுங்கு சினிமா மூலம் முதன் முதலில் திரையுலகிற்கு அறிமுகமான ஹன்சிகா தமிழில் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.
அனைத்து முன்னனி நட்சத்திரங்களுடன் ஜோடி சேர்ந்த ஹன்சிகா சமீபத்தில் இவரின் தயாரிப்பில் வெளியான மகா படம் எதிர்பார்த்த வெற்றியை பதிவுசெய்யவில்லை. மேலும் தெலுங்கிலும் தமிழிலும் கைவசம் படங்களை வைத்திருக்கும் ஹன்சிகாவிற்கு
இதையும் படிங்க : இந்த படத்துலயே சினிமாவுக்கு முழுக்கு போட நினைத்த ஜெயலலிதா!..கடைசில என்னாச்சுனு தெரியுமா?..
விரைவில் திருமணத்தை நடத்த அவரின் குடும்பத்தார் ஏற்பாடு செய்து வருகின்றனர். இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்தாண்டு முதலிலேயே திருமணத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர். மும்பையை சேர்ந்த பிரபல தொழிலதிபரை ஹன்சிகா மணக்க இருக்கிறாராம்.
ஹன்சிகாவுக்கு டிசம்பர் மாதம் ஜெய்ப்பூரில் உள்ள முண்டோடா கோட்டை என்ற 450 ஆண்டு கால பழமையான அரண்மனையில் திருமணம் நடைபெறவுள்ளாத தகவல் வெளியாகியிருக்கிறது. ஏற்கெனவே அவரது சகோதரர் பிரசாந்த் மோத்வானியின் திருமணமும் 2021 இல் இதே இடத்தில் நடத்தப்பட்டது என்பது குறிப்படத்தக்கது.