விஜய் பட நடிகையை வளைத்துப்போட்ட சாந்தனு.... அட இவரும் விஜய் ரசிகர் தான்!
கோலிவுட்டில் தனது தந்தை ஒரு பெரிய இயக்குனராகவும், நடிகராகவும் இருந்தாலும் பல ஆண்டுகளாக தனக்கென ஒரு தனி அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என போராடி வரும் வாரிசு நடிகர் தான் சாந்தனு. இவரும் கிடைக்கும் வாய்ப்புகளை விடாமல் நடித்து வருகிறார். இருப்பினும் இவரது படங்கள் வரவேற்பை பெறுவதில்லை.
கடந்தாண்டில் இவர் நடிப்பில் சொல்லிக்கொள்ளும்படி வெளியான படங்கள் என்றால் பாவக்கதைகள் மற்றும் மாஸ்டர் ஆகிய படங்கள் தான். இறுதியாக இவர் நடிப்பில் வெளியான முருங்கைக்காய் சிப்ஸ் படம் தோல்வியை தான் தழுவியது. இந்நிலையில் தற்போது தொடர்ந்து காமெடி படங்கள் மூலம் அடுத்தடுத்து வெற்றி பெற்ற இயக்குனர் ராஜேஷுடன் சாந்தனு கூட்டணி அமைத்துள்ளார்.
தமிழில் சிவா மனசுல சக்தி, பாஸ் என்ற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி என ஹாட்ரிக் ஹிட் கொடுத்த இயக்குனரான ராஜேஷ் தற்போது டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திற்காக ஒரு வெப் தொடர் ஒன்றை இயக்கி வருகிறாராம். இதுவரை காமெடியை மட்டுமே முதன்மையாக வழங்கி வந்த ராஜேஷ் தற்போது முதல் முறையாக ஹாரரை கையில் எடுத்துள்ளாராம்.
வெறும் 40 நாட்களில் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடிக்கும் விதமாக தற்போது ஊட்டியில் நடந்து வரும் இந்த வெப் தொடரில் நடிகை ஹன்சிகா தான் லீடு ரோலில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இத்தொடர் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதன்படி இந்த தொடரில் நடிகர் சாந்தனு தான் ஹன்சிகாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறாராம். இதுவரை அறிமுக நாயகிகளுடன் மட்டுமே ஜோடி போட்டு வந்த சாந்தனு முதன் முறையாக ஒரு முன்னணி நடிகைக்கு ஜோடியாக நடிக்கிறார். இனியாவது அவருக்கென நல்ல படங்கள் அமையுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.