தோழியின் கணவரை ஆட்டையை போட்ட ஹன்சிகா.. இரண்டாம் தாரமாகும் பகீர் தகவல்..

தமிழ் சினிமாவில் குட்டி குஷ்பூ எனச் செல்லமாக அழைக்கப்பட்டு வரும் ஹன்சிகா சமீபத்தில் தனது காதலரை அறிமுகப்படுத்தினார். ஆனால் தற்போது அதுகுறித்த சர்ச்சை தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஹன்சிகா

ஹன்சிகா

குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தவர் ஹன்சிகா மோட்வானி. இந்தி, தெலுங்கில் பல படங்கள் நடித்திருந்தாலும் தமிழில் வேலாயுதம் படம் மூலம் தான் அறிமுகமானார். தொடர்ச்சியாக அவருக்கு வாய்ப்புகள் வர கோலிவுட் நாயகிகளில் முன்னணி பட்டியலில் இணைந்தார். சமீபத்தில் இவருக்கு திருமணம் அரண்மணை ஒன்றில் நடக்க இருப்பதாக தகவல்கள் உலா வந்தது. அடுத்த சில தினங்களில் தனது காதலருடன் இருக்கும் படத்தினை பகிர்ந்து தனது திருமண சேதியை ரசிகர்களுக்கு தெரிவித்தார்.

ஹன்சிகா

ஹன்சிகா

இந்நிலையில், அவர் காதலர் சோகேல் கதுரியா ஏற்கனவே திருமணம் ஆனவர் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. அதுவும் ஹன்சிகாவின் நெருங்கிய தோழி ரிக்கியின் கணவர் தான் சோகேல். இவர்களுக்கு கடந்த 2016ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்தில் ஹன்சிகாவும் கலந்து கொண்டு டான்ஸ் ஆடிய வீடியோவெல்லாம் தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Related Articles
Next Story

COPYRIGHT 2024

Powered By Blinkcms
Share it