சிறுமியாக இருந்த போதே சில ஹிந்தி படங்களில் நடித்தவர் ஹன்சிகா மோத்வானி. டீன் ஏஜை எட்டியுடன் ஹிந்தியில் கதாநாயகியாக நடிக்க முயன்றார். ஆனால், வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

எனவே, தெலுங்கு சினிமா பக்கம் சென்றார். அங்கு சில படங்களில் நடித்தார். தனுஷ் நடிப்பில் சுராஜ் இயக்கிய மாப்பிள்ளை படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கினார்.
Also Read

ஹன்சிகாவின் பப்ளியான உடலமைப்பு தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து போய் இவரை குட்டி குஷ்பு எனவும் அழைக்க துவங்கினார்.

சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, தனுஷ், சிம்பு, ஜீவா, ஆர்யா, விஜய் உள்ளிட்ட பல ஹீரோக்களுடனும் ஜோடி போட்டு நடித்தார். சில வருடங்கள் இவரின் கையில் மார்க்கெட் இருந்தது.

அதன்பின் இவருக்கு மார்க்கெட் குறைய துவங்கியது. அதோடு, ரசிகர்களுக்கு அவரிடம் பிடித்த பப்ளி உடலை ‘உடம்பை குறைக்கிறேன்’ எனக்கூறி ஸ்லிம்மாக மாறி அதிர்ச்சி கொடுத்தார்.

சமீபத்தில் திருமணமும் செய்து கொண்டார். ஆனால், திருமணமாகியும் கவர்ச்சியான உடைகளை அணிந்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிடுவதை ஹன்சிகா நிறுத்தவில்லை.




