ஒரு நிமிஷத்துக்கு 5 லட்சம்!.. மணமகனிடம் ரகசிய டீல் பேசிய ஹன்சிகாவின் தாய்...
பாலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க துவங்கியவர் ஹன்சிகா மோத்வானி. டீன் ஏஜை எட்டியவுடன் தெலுங்கு சினிமாக்களில் நடிக்க துவங்கினார். தனுஷ் நடித்த மாப்பிள்ளை திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார். பப்ளியான உடம்பும், குழந்தை போல அவர் பேசும் ஸ்டைலும் கோலிவுட் ரசிகர்களுக்கு பிடித்து போனது. எனவே, தொடர்ந்து திரைப்படங்களில் நடித்தார். இவரின் குட்டி குஷ்பு எனவும் ரசிகர்கள் செல்லமாக அழைத்தனர்.
விஜய், சூர்யா, கார்த்தி, சிம்பு, தனுஷ், ஜெயம்ரவி, விஷால், ஜீவா என பலருடனும் ஜோடி போட்டு நடித்து முன்னணி நடிகையாகவும் மாறினார். நடிகர் சிம்புவை காதலித்து பின் பிரேக்கப் செய்தார். ஒருகட்டத்தில் அவருக்கு வாய்ப்புகள் குறைந்தது. அதோடு, அவரிடம் ரசிகர்களுக்கு என்ன பிடிக்குமோ அந்த பப்ளி உடம்பை ‘உடல் இளைக்கிறேன்’ எனக்கூறி ஸ்லிம்மாக மாறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
தற்போது அவருக்கு தமிழில் அவ்வளவு வாய்ப்புகள் இல்லை. எனவே, தனது நீண்ட நாள் நண்பர் சோஹைல் சதுரியாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் ஜெய்ப்பூரில் உள்ள ஒரு அரண்மனையில் நடைபெற்றது. இவர்களின் திருமண வீடியோ டிஷ்னி ஹாட் ஸ்டாரில் ‘லவ் ஷாதி டிராமா’ என்கிற பெயரில் வெளியானது. அதில், ஹன்சிகாவும், அவரின் தாயாரும் திருமணம் குறித்து பல தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.
அப்போது பேசிய ஹன்சிகாவின் தாய் மோனா மோத்வானி ‘என் மருமகன் சோஹோலின் அம்மா அனைத்து விழாக்களுக்கு தாமதமாகவே வருகிறார். ‘நீங்கள் தாமதம் செய்யும் ஒவ்வொரு நிமிடத்திற்கும் ரூ.5 லட்சம் எனக்கு கொடுக்க வேண்டும் என அவரிடம் கோரிக்கை வைக்கிறேன்’ என பேசியுள்ளார்.
இதையும் படிங்க: இவர் சிறந்த நடிகர் தான்… ஆனாலும் தொடர்ந்து பீல்டுல நிக்க முடியல… காரணங்கள் இவ்ளோ இருக்கா…?!