கல்யாணத்துக்கு முன்னாடியே இப்படி பண்ணலாமா? வீடியோ போட்டு வாயடைக்க வைத்த ஹன்சிகா..
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகையாக இருந்தவர் நடிகை ஹன்சிகா. கொழுக் மொழுக் நடிகையாக வலம் வந்த ஹன்சிகா பல ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்தார்.
முதன் முதலில் தனுஷின் மாப்பிள்ளை படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின் எங்கேயும் காதல் ஜெயம் ரவியுடன் நடித்து ஒரு க்யூட் கேர்ளாக வலம் வந்தார். வெள்ளித்திரையின் குஷ்பு என பலராலும் அறியப்பட்டார் ஹன்சிகா.
தொடர்ந்து வேலாயுதம், ஒகே ஒகே, போன்ற வெற்றிப்படங்களில் நடித்தார். அதுவும் சூர்யா, விஷால், சிம்பு, சிவகார்த்திகேயன் என முன்னனி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து ஒரு முன்னனி நாயகியாகவே வலம் வந்தார்.
ஹன்சிகா தற்போது கல்யாண கோலத்தில் ஆடிப்பாடி மகிழ்ந்து வருகிறார். மும்பை தொழிலதிபர் ஒருவரை மணந்து கொள்ள இருக்கிறார். இருவருக்கும் நிச்சயதார்த்தம் வரை நடந்திருக்கிறது. இந்த நிலையில் கல்யாணத்திற்கு முன் பேச்சுலர் பார்ட்டி என்ற ஒன்றை நிகழ்த்தி நண்பர்களுடன் இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் தனது தோழிகளுடன் குத்தாட்டம் போட்டும் கவர்ச்சி நடனமும் ஆடி ரசிகர்களை குதூகலப்படுத்தியுள்ளார்.
இதோ அந்த வீடியோ: https://www.instagram.com/reel/ClbWek6DpFT/?utm_source=ig_web_copy_link