Home > Cinema News > ஹன்சிகாவிடம் காதலை வெளிப்படுத்திய காதலர்!.. ‘எங்கேயும் காதல்’ டிரெண்டிங்கில் வெளியான புகைப்படங்கள்!..
ஹன்சிகாவிடம் காதலை வெளிப்படுத்திய காதலர்!.. ‘எங்கேயும் காதல்’ டிரெண்டிங்கில் வெளியான புகைப்படங்கள்!..
X
தனுஷ் நடித்த மாப்பிள்ளை படம் மூலம் அறிமுகமானவர் ஹன்சிகா மோத்வானி. கொளுக் மொழுக் அழகில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
விஜய், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்தார். ஆனாலும், நயன்தாரா போன்ற நடிகைகள் மார்க்கெட்டை பிடித்துவிட்டதாலும் அவருக்கான வாய்ப்புகள் குறைந்துவிட்டது.
சிம்புவுடன் அவர் நடித்த ‘மகா’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஃபிளாப் ஆனது. தற்போது அவர் சில வெப் சீரியஸ் மட்டுமே அவரின் கையில் இருக்கிறது.
இந்த நிலையில் ஒரு தொழிலதிபரை தன் சகோதரனுக்கு திருமணம் நடந்த அரண்மனையில் பாரம்பரிய முறையில் திருமணம் செய்யப்போவதாக தகவல்கள் வெளிவந்தன.இதை உறுதிபடுத்தும் வகையில் ஹன்சிகாவிற்கு அவரது காதல் கணவரான சோஹைல் காதலின் சின்னமான ஈஃபிள் டவர் முன் மண்டியிட்டு will you marry me? என்று தன் காதலை வெளிப்படுத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் தான் இப்போது சமூக வலைதளங்களில் டிரெண்டிங்காக வருகிறது.
Next Story