ஏலியனை நம்பி ஏமாந்துப் போன சிவகார்த்திகேயன்!.. அனுமானை நம்பி அஜித் வசூலையே வீழ்த்திய இளம் ஹீரோ!..

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் பல படங்கள் வெளியாகின. வானைத்தைப் பார்த்து உக்கார்ந்தா ஏலியனார் கோயிலை கட்டி காசு எண்ணிடுவாங்க என மத நம்பிக்கைக்கு எதிராக பாடல் வரிகளை வைத்து உருவான சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வியை பார்த்துள்ளது.

ஆனால், அதே நேரத்தில் அனுமானை நம்பி ஹனுமான் எனும் டைட்டிலில் சிவகார்த்திகேயனை விட சினிமாவுக்கு புதிதான இளம் ஹீரோ நடித்த தேஜா சஜ்ஜா படத்தின் வசூல் அஜித்தே இதுவரை அடையாத வசூலை அசால்ட்டாக அள்ளியிருக்கிறது.

இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் ஹீரோவாக நடித்த முதல் படமே டிராப்?!.. கடவுள் போல் வந்து காப்பாற்றிய தயாரிப்பாளர்….

இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் 40 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான ஹனுமான் திரைப்படம் கடந்த ஜனவரி 12ம் தேதி பான் இந்தியா படமாக வெளியானது. தெலுங்கை தாண்டி தென்னிந்திய மொழிகளில் அந்த படம் ஓடவில்லை. ஆனால், அவர்கள் டார்க்கெட்டே பாலிவுட் மற்றும் ராமர் கோயில் திறப்பு தான்.

அதனை பயன்படுத்தி இதுவரை 25 நாட்களில் 300 கோடி வசூலை அந்த படம் ஈட்டி சாதனை படைத்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: நானும் எம்.ஜி.ஆரும் பெரிய தப்பு பண்ணிட்டோம்!. பல வருடங்கள் கழித்து ரஜினியிடம் சொன்ன சிவாஜி..

இந்த ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அயலான் மற்றும் தனுஷ் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் உள்ளிட்ட படங்கள் 100 கோடி வசூலை கூட தொடவில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை.

பல தியேட்டர்கள் 10 பேருக்கு ஷோ ஓட்ட முடியாது என கேன்சல் பண்ணிய அவலங்களும் இந்த 25 நாட்களில் இந்த இரண்டு படங்களுக்கும் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான துணிவு படமே 200 கோடி தான் வ்சூல் ஈட்டியது. ஆனால், இளம் நடிகர் தேஜா சஜ்ஜா நடித்து வெளியான ஹனுமான் படம் 300 கோடி வசூலை அள்ளி ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

Related Articles

Next Story