விக்ரம் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ்… இனிமே இழுத்தடிக்க மாட்டோம்!... இதுதான் பைனல்
ஒரு வழியா துருவ நட்சத்திரம் படத்தோட ரிலீஸ் குறித்த அப்டேட் கிடைத்துள்ளது.
கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் விக்ரம் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் 'துருவ நட்சத்திரம்'. ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன், விநாயகன், திவ்யதர்ஷினி என பல நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார்.
ஹாலிவுட் தரத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஹாலிவுட் சினிமாவில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஆனால் இந்தப் படம் வெளியாவதில் பல சிக்கல்கள் நிலவி வருகின்றன. படம் இப்போது வெளியாகும் அப்போது வழியாகும் என்று நாட்கள் தள்ளிப் போய் வருவது தான் மிச்சம்.
கோலிவுட் ரசிகர்களும் படத்தின் அப்டேட் கேட்டு கேட்டு சோர்ந்து போய்விட்டனர். கௌதம் மேனன்னும் அடுத்த படம் இயக்க தாவி விட்டார். தற்போது முழு நேர நடிகராகவும் உருவெடுத்துள்ளார். வெளியாகும் அனைத்து படங்களிலும் நடிகர்கள் லிஸ்டில் கௌதம் மேனன் பெயரும் இடம் பெற்றுவிடுகிறது.
தற்போது நடிகர் விக்ரமின் தீவிர ரசிகர்கள் துருவ நட்சத்திரம் படத்தை பார்த்தே ஆக வேண்டும் என்று ஒற்றைக் காலில் நிற்கின்றனர். இந்நிலையில் துருவ நட்சத்திரம் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் கிடைத்துள்ளது.
வரும் மே மாதம் 19-ம் தேதி துருவ நட்சத்திரம் திரைப்படம் உலகெங்கிலும் திரையரங்குகளில் வெளியாக இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் ஏப்ரல் 14-ம் தேதி பிரமாண்டமான முறையில் படத்திற்கு ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தமுறை எந்தவித இழுபறியும் இல்லாமல் படம் வெளியாகும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.