latest news
ஹேப்பி ராஜ் : 3ம் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் வெளியாகியுள்ள ஹாப்பி ராஜ் திரைப்படத்தின் 3 நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரங்கள் வெளியாகியுள்ளன.
இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள படம் ஹாப்பி ராஜ். இப்பபடத்தில் ஜி.வி. பிரகாஷ் உடன் ஜார்ஜ் மரியான், ஸ்ரீ கௌரி பிரியா, அப்பாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மரியா ராஜா இளஞ்செழியன் இன்ற புதிய இயக்குனர் இயக்கியுள்ள இந்த படம் துவக்கத்தில் கலவையான விமர்சனங்கள் பெற்றபோதிலும் குடும்பங்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் படம் பிடித்திருப்பதால், தொடர்ந்து திரையரங்குகளில் ஹவுஸ்புல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில், இப்படத்தின் முதல் மூன்று நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி ஹாப்பி ராஜ் 3-வது நாளில் இந்தியா முழுவதும் சுமார் 974 காட்சிகள் திரையிடப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் குடும்ப ஆடியன்ஸின் வருகை அதிகமாக இருந்தது. இதன் காரணமாக, 3-வது நாளில் மட்டும் இப்படம் ரூ. 1.05 கோடியை நிகர வசூலாக (Net Collection) ஈட்டியுள்ளது.
இதுவரையில் மொத்த நிகர வசூல் ரூ. 2.75 கோடி, மொத்த வசூல் ரூ 3.16 கோடி வசூலை பெற்றுள்ளது. பெரிய பட்ஜெட் படங்களுக்கு மத்தியில், தரமான கதையம்சம் கொண்ட படங்கள் எப்போதுமே ரசிகர்களால் கொண்டாடப்படும். அந்த வரிசையில் ‘ஹாப்பி ராஜ்’ படமும் இணைந்துள்ளது.
