இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ்குமார் நடிப்பில் ஹேப்பி ராஜ் படம் இம்மாதம் 27ம் தேதி வெளியாக உள்ளது.
ஹேப்பிராஜ் படத்தில் பிரகாஷ் உடன் கௌரி பிரியா நாயகியாக நடிக்கிறார். அதுமட்டுமல்லாமல் 11 ஆண்டுகள் கழித்து நடிகர் அப்பாஸ் இப்படம் மூலம் ரீ என்ரி கொடுக்கிறார்.
ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கும் இப்படத்தினை மரியா ராஜா இளஞ்செழியன் இயக்கியுள்ளார். இவர் பிரதீப் ரங்கநாதனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார்.
ஹேப்பி ராஜ் முழுக்க முழுக்க இளைஞர்களை கவரும் வகையில் ரொமண்டிக் காமெடி ஜானரில் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஹேப்பிராஜ் படம் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற 27ம் தேதி இப்படம் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.





