14 வருட வன வாசத்துக்கு பிறகு மோகன் நடித்துள்ள ஹரா திரைப்படம் வெளியாகி உள்ளதே படத்தை பார்க்கலாம் என நினைத்து தியேட்டருக்கு சென்ற ரசிகர்களுக்கு ஒய் பிளட் சேம் பிளட் கதை தான். பெரிதாக எந்தவொரு மெனக்கெடலும் இல்லாமல் இயக்குனர் விஜய் ஸ்ரீ மோகனை பிரைன் வாஷ் பண்ணி இந்த படத்தில் நடிக்க வைத்து விட்டாரா? என்கிற கேள்வியைத்தான் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.
கோயம்புத்தூரில் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த தனது மகள் திடீரென தற்கொலை செய்துக் கொண்டு உயிரிழந்தார் என்கிற செய்தி கேட்டதும் ஷாக்கான மோகன் மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அறிந்து ராமாக இருந்த மோகன் தன்னையும் இறந்தவர் லிஸ்ட்டில் சேர்த்துக் கொண்டு தாவூத் இப்ராஹிமாக ஆள்மாறாட்டம் செய்து கள்ளத் துப்பாக்கியை வாங்கிக் கொண்டு தனது மகளின் மரணத்துக்கு காரணமானவர்களை வேட்டையாடி கொல்கிறேன் என கிளம்பி உள்ளார்.
இதையும் படிங்க: இந்தியன் படத்துக்கு ஆஸ்கர் கிடைக்காததுக்கு இதுதான் காரணமாம்… இவ்ளோ நாள் தெரியாமப் போச்சே..!
அவர் கிளம்பும் போதே ரசிகர்களும் பாதியிலேயே தியேட்டரில் இருந்து கிளம்ப ஆரம்பித்து விடுகின்றனர். தெரியாத்தனமாக முழு படத்தையும் உட்கார்ந்து பார்த்தவர்களின் நிலை கடைசியில் ரெஸ்ட் இன் பீஸ் என்பது போலத்தான் உள்ளது.
அரைத்த மாவையே வித்தியாசமாக அரைத்துக் காட்டுகிறேன் என நினைக்காமல் மாவு அரைப்பது பழைய முறை தானே அப்படியே அரைத்து காட்டுகிறேன் பாருங்க என இயக்குனர் விஜய் ஸ்ரீ பண்ணியுள்ள அட்டகாசத்தை எல்லாம் என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
இதையும் படிங்க: ப்ப்பா!.. சும்மா தளதளன்னு இருக்கு உடம்பு!.. பாவாடை தாவணியில் சூடேத்தும் ஜான்வி கபூர்!..
மகளுக்கு பீரியட்ஸ் ஏற்பட்டதால் தேர்வுக்கே அனுப்ப மாட்டேன் என சொல்வது, மகளுடன் பாசமான அப்பாவாக நடித்துக் காட்டுகிறேன் பாருங்கள் என செயற்கைத் தனமான நடிப்பை வெளிப்படுத்துவது, வழக்கறிஞராக யோகி பாபு காமெடி என்கிற பெயரில் செய்யும் கொடுமை என படம் முழுக்கவே ஹரா அரைகுறையாகத்தான் உள்ளது. இதுக்கு விஜய்யோட சுறாவே இன்னொரு வாட்டி மன தைரியத்துடன் பார்ப்பேன் என தியேட்டரிலேயே ரசிகர்கள் கத்தி விட்டு கடுப்பில் செல்வதை வைத்தே மோகனின் சோலியை முடிச்சி விட்டாய்ங்க என தெரிகிறது.
ஹரா: குறை!
ரேட்டிங்: 2/5.
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…
இயக்குனர் அட்லீ…