என்னங்க ஹரி சினிமாட்டிக் யூனிவர்ஸா… சிங்கம் படத்தில் இது நடக்க இருந்தது… ஆனா ஜஸ்ட்டு மிஸ்ஸு..
Hari: இயக்குனர் ஹரி தன்னுடைய படத்திலும் சினிமாட்டிக் யூனிவர்ஸை ட்ரை செய்ய நினைத்தாராம். ஆனால் அது ஒருசில காரணங்களால் நடிக்காமல் போனதாக தற்போதைய பேட்டி ஒன்றில் தெரிவித்து இருக்கிறார்.
பெரும்பாலும் ஹாலிவுட் சினிமாக்களில் தான் சினிமாட்டிக் யூனிவர்ஸ் என்ற விஷயம் இருக்கும். லோகேஷ் கனகராஜின் விக்ரம் படம் மூலம் அந்த ஐடியாக்களை பயன்படுத்தினார். அதை தொடர்ந்து லியோ படத்திலும் அதை செய்து இருந்தார்.
இதையும் படிங்க: விஜய்க்காக இறங்கி வந்த லாரன்ஸ்! அடுத்து அரசியலிலும் ஆட்டம் காட்டுவார்களா? வைரலாகும் வீடியோ
இதை ரசிகர்கள் பலர் நல்ல விஷயமாகவே பார்க்கின்றனர். அந்த வகையில் மற்ற முக்கிய இயக்குனர்களும் சினிமாட்டிக் விஷயத்தினை கையில் எடுத்தால் எப்படி இருக்கும் என்ற கேள்வி தொடர்ச்சியாக அவர்கள் முன் வைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இயக்குனர் ஹரி இதற்கு தற்போது பதில் அளித்திருக்கிறார். தற்போது இல்லை. ஆனால் சிங்கம் மூன்றாம் பாகத்திலேயே துரைசிங்கத்தினை காண விமானத்தில் இருந்து இறங்கி ஆறுச்சாமியும், அவர் மனைவியும் வருவார்கள். பெருமாள் பிச்சை பற்றி பேசிவிட்டு செல்வது போல அமைக்க இருந்தோம்.
இதையும் படிங்க: கேப்டனாக மாறிய வினுசக்கரவர்த்தி! கலாட்டா செய்த ரசிகர்களை என்ன செய்தார் தெரியுமா?
ஆனால் அதில் சில நடைமுறை சிக்கல் இருந்தது. அதனால் அது நடக்காமல் போய்விட்டது. சிங்கம்4 படத்தினை இயக்குவேனா எனத் தெரியாது. ஆனால் ரத்னம் படத்தின் வேலைகள் முடிந்த கையோடு ஒரு போலீஸ் கதையை இயக்க இருக்கிறேன் எனக் குறிப்பிட்டார்.
தற்போது விஷாலை வைத்து ரத்னம் படத்தினை இயக்கி இருக்கிறார். இப்படம் வரும் 26ந் தேதி வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இதன் புரோமோஷன் பணிகளில் ஹரி மற்றும் விஷால் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.