விஜய் சாருக்கு நான் கதை சொல்லிருக்கேன்.. ரகசியம் உடைத்த ஹரி.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே...
யானை எனும் வெற்றி படம் மூலம் மாஸ் கமர்சியல் குடும்ப திரைப்பட இயக்குனராக இயக்குனர் ஹரி தமிழ் சினிமாவுக்குள் வந்துவிட்டார். இந்த வெற்றி அடுத்தடுத்து மீண்டும் விக்ரம், சூர்யா என பெரிய பெரிய நடிகர்களை இயக்கும் வாய்ப்பு உருவாகும் என கூறப்படுகிறது.
அதே போல தான் அவரும் அண்மைக்கால பேட்டிகளில் தான் ஏற்கனவே சூர்யாவுடன் இணைய இருந்த அருவா திரைப்படம் இன்னும் அப்படியே தான் இருக்கிறது. அதனை வேண்டும் என்றால் எடுத்துவிடலாம் என கூறி சந்தோசப்படுத்தியுள்ளார்.
யானை பட ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக அவர் பல்வேறு நேர்காணலில் கலந்துகொண்டார். அதில் யானை படம் மட்டுமல்லாமல் , அவர் யாருக்கெல்லாம் கதை சொல்லி இருக்கிறார் என வெளிப்படையாக பேசினார்.
இதையும் படியுங்களேன் - ரஜினி மகளுக்கு தூது விட்ட தனுஷ்.. ஐஸ்வர்யா போட்ட ஒரே கண்டிஷன் இதுதான்.!
அப்போது தளபதி விஜய் உடன் எப்போது இணைந்து பணியாற்ற போகிறீர்கள் என கேட்டதற்கு, நான் நிறைய தடவை மீட் பண்ணி கதை கூறி இருக்கிறேன். கதை கூறுவது என் வேலை, அது அந்த சமயம் ஒத்துவந்தால், இருவரு பணியாற்றுவோம். வருங்காலத்தில் நடக்கலாம் என்பது போல பேசியிருந்தார் இயக்குனர் ஹரி.
ஏன், சிங்கம் கதை முதலில் விஜய்க்கு சொல்லப்பட்டது என்று கூட கோடம்பாக்கத்தில் ஒரு கிசு கிசு உண்டு. அந்த கதையை கூட ஹரி விஜயிடம் கூறியிருக்கலாம் என பலர் கிசுகிசுகின்றனர்.