அத எடுத்துருக்கவே கூடாது…’சாமி’ படத்தின் அந்த சீனை நினைச்சு வருத்தப்படும் இயக்குனர் ஹரி…!

Published on: July 1, 2022
hari_main_cine
---Advertisement---

பரபரப்பிற்கு பேர் போனவர் இயக்குனர் ஹரி. தனக்கென தனி பாணியை அமைத்து சுமார் இருபது ஆண்டு காலமாக தமிழ் சினிமாவிற்கு பல வெற்றி படங்களை கொடுத்துக் கொண்டு வருகிறார் ஹரி.

hari1_cine

நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் அருண்விஜயை வைத்து ‘யானை’ என்ற படத்தை எடுத்து வெற்றி கண்டுள்ளார். இன்று ரிலீஸ் ஆன நிலையில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஹரியில் முதல் படத்திலயே வெற்றி கண்டவர்.

hari2_cine

பிரசாந்த் நடிப்பில் வெளியான தமிழ் என்ற படம் தான் ஹரிக்கு முதல் படமாகும். வசூலிலும் சாதனை செய்த படமாக அமைந்தது. அடுத்தடுத்து சாமி, சிங்கம் என ஹிட் படங்களை கொடுத்தார். கமெர்ஷியல் கிங் என்று சொல்லலாம்.

hari3_cine

இந்த நிலையில் விக்ரம் நடித்த சாமி படத்தை பற்றி சமீபத்தில் ஹரி கூறும்போது விக்ரமின் அறிமுக காட்சியை எடுக்கும் போது அந்த நேரத்தில் அது லோக்கலாக இருக்கும் என எண்ணி எடுத்தேன். அதாவது இட்லியில் பீர் ஊற்றி சாப்பிடுவதுமான காட்சி. அப்பொழுது ஒன்றும் தோன்ற வில்லை. ஆனால் அதை பற்றி இப்பொழுது நினைக்கும் போது வருத்தப்படுகிறேன். ஏனெனில் நான் மதுவுக்கும் போதைக்கும் முற்றிலும் எதிரானவன் என கூறினார்.