தொலைச்சிருவேன் தொலைச்சு...! ஹரியின் கோபத்திற்கு ஆளாகிய சிம்பு...!
தமிழ் சினிமாவில் கடந்த 20ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றி இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் ஹரி. பிரசாந்த், சிம்ரன் நடிப்பில் 2002 ஆம் ஆண்டு வெளியான தமிழ் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் ஹரி. அதையடுத்து சாமி என்ற படத்தை எடுத்து நல்ல வரவேற்பை பெற்றார்.
சிம்பு, சரத்குமார், சூர்யா, விஷால் போன்ற முன்னனி நடிகர்களோடு சேர்ந்து வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார். சூர்யாவுடன் இணைந்து சிங்கம் என்ற படத்தை எடுத்தார். அது இன்றளவும் பெருமையாக பேசப்பட்டு வருகிறது. அதன் மூலம் சிங்கம் 2, 3 போன்ற படங்களை எடுத்து அதுவும் வீர நடை போட்டது.
சாமி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்தார்.ஆனால் படம் எதிர்பார்த்த அளவு போகவில்லை. மேலும் சூர்யாவுடன் அருவா படத்தில் இணைவதாக தகவல் வெளியானது. ஆனால் சூர்யாவுடனான மனக்கசப்பில் படப்பிடிப்பு நடக்கவில்லை. இந்த நிலையில் சிம்புவுடன் சேர்ந்து கோவில் என்ற படத்தை எடுத்தார்.
படம் ஆரம்பிப்பதற்கு முன்பே சிம்புவிடம் பல கண்டீசன்களை போட்டார் ஹரி. தாமதமாக வரக்கூடாது.குறிப்பிட்ட காலத்தில் படம் முடித்தாக வேண்டும் என்று. ஆனால் சிம்பு தொடர்ந்து 3 நாள்கள் தாமதமாக வந்துள்ளார்.கடுப்பாகி போன ஹரி அவருடைய உதவி இயக்குனரை அழைத்து சூட்டிங் எத்தனை மணிக்கு? நீ எத்தனை மணிக்கு வந்திருக்கிறாய்? நீ இல்லைனா படம் என்னாகும்னு தெரியுமா? தொலைச்சுடுவேன். காசு வாங்குறீல. அதற்கேற்ப சரியான நேரத்திற்கு வரவேண்டாமா? என கேட்டு சிம்புவிடம் என்ன சிம்பு நான் சொல்றது சரிதானே? என கேட்டாராம். ஆனால் சிம்புவிற்கு நம்மல தான் திட்டுறான் என தெரிஞ்சுருக்கும்.