கத்திரிக்கா முத்துனா கடைவீதிக்கு வந்துதான ஆகனும்.! ஹாரிஸ் ஜெயராஜூம் புது இயக்குனரும்.!
ஒரு காலத்தில் மெலடி கிங் என்றால் அது ஹாரிஸ் ஜெயராஜ் தான். தற்போதும் அவர் மெலடி கிங் தான். அவருடைய பாடல்கள் தான் பெரும்பாலான இளைஞர்களுக்கு இரவு நேர தாலாட்டு, காலேஜ் விழாக்கால ஆட்டம்போட பாடல்கள், கல்லூரி பள்ளிகளில் விடைகொடுக்க கண்ணீர் வரவழைக்க மெலடி பாடல்கள் என பிரித்து மேய்ந்திருப்பார்.
ஏ.ஆர் ரகுமான் பாலிவுட் , ஹாலிவுட் என சென்ற போது தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்கள் ஹாரிஸ் கால்ஷீட்காக காத்திருந்தனர். ஒரு படம் எடுத்தால் அதில் ஆல்பம் ஹிட் கொடுப்பது ஹாரிஸின் தனி ஸ்டைல். தற்போது அப்படிப்பட்ட ஆல்பம்கள் சூப்பர் ஹிட் ரகம் தான்.
ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. புது புது இசையமைப்பாளர்கள், அவர்களிடம் இருந்து புதுவிதமான பின்னணி இசை, காதை கிளிக்கும் தர லோக்கல் பாடல்கள் என இளசுகளை தற்போதைக்கு ஈர்க்கும் இசையமைப்பாளர்கள் ஏராளம். அதனால் ஹாரிஸ் இருந்த இடம் தெரியாமல் போய் விட்டார் என்றே கூற வேண்டும்.
தற்போது அவரது இசையில் என்ன படம் வரப்போகிறது என கூகுலிடம் கேட்டால் அதற்கு கூட தெரியுமா என்று தெரியவில்லை. சரவணா ஸ்டோர் அண்ணாச்சி நடிக்கும் புதிய படத்திற்கு இசையமைத்து வந்தார் ஆனால் அந்த படம் நடிகர் விவேக்கின் மரணத்திற்கு பிறகு என்னவானது என தெரியவில்லை.
அவர் வளர்ந்திருந்த காலத்தில் பிரபல இயக்குனர்களே வரிசையில் நின்ற காலம். புது முக இயக்குனர்களை அவர் கண்டுகொண்டது கூட இல்லை. ஆனால் தற்போது அவர் ஒரு புதுமுக இயக்குனர் படத்திற்கு இசையமைக்க ஒத்துக்கொண்டுள்ளாராம். அது போக M.ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் புதிய படத்திற்கும் ஹாரிஸ் தான் இசையாம்.