ஆளே மாறிப் போன நம்ம சார்மிங் நடிகர்..! அப்ப அதுவா இருக்குமோ..?
தமிழில் ஓரிரு படங்களில் நடித்திருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமானவர் நடிகர் ஹரிஸ் கல்யாண். ‘சிந்து சமவெளி’ படம் தான் இவர் முதன் முதலில் தமிழில் அறிமுகமான படம். இந்தப் படத்தை அடுத்து பொறியாளன், வில் அம்பு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
பின்னர் இவர் நடிப்பில் வெளியான பியார் பிரேமா காதல், இஸ்பேட் ராஜாவும் இதயராணியும் உள்ளிட்ட படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தன. விவேக் உடன் தனுசு ராசி நேயர்களே படமும் பேசும் அளவுக்கு அமைந்தது. இவர் கைவசம் 2 படங்கள் வைத்துள்ளார். நடிகர் விவேக் அவர்களின் பணியை பின்பற்றி அண்மையில் சில மரக்கன்றுகளையும் நட்டினார்.
அதுமட்டுமில்லாமல் சமூக பணிகளை செய்வதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். தன்னுடைய படங்களில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்திவரும் ஹரீஷ் தொடர்ந்து காதல் கதைகளையே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். வித்தியாசமான வகைகளில் காதல் கதைகளை இவர் தேர்ந்தெடுத்து நடித்து வருவது இவரது சக்சசிற்கு காரணமாக அமைந்துள்ளது.
இந்த நிலையில் இன்ஸ்டா மற்றும் ட்விட்டர் பக்கத்திலும் ஆக்டிவாக இருக்கும் நம்ம நடிகர் தற்போது முகத்தில் தாடியுடன் இருக்கும் போட்டோவை பதிவிட்டுள்ளார். அதை பார்த்து ரசிகர்கள் காதல் தோல்வியா என கமென்ட் செய்துள்ளனர்.