ரைசாவை கழற்றிவிட்ட ஹரிஷ் கல்யாண்...விரைவில் டும்டும்டும்... மணப்பெண் யார் தெரியுமா?

by Akhilan |   ( Updated:2022-10-05 08:38:46  )
ரைசாவை கழற்றிவிட்ட ஹரிஷ் கல்யாண்...விரைவில் டும்டும்டும்... மணப்பெண் யார் தெரியுமா?
X

தமிழ் சினிமாவின் இளம் கதாநாயகனாக ஹரிஷ் கல்யாண் தனது திருமணம் குறித்த முக்கிய தகவலை வெளியிட்டு இருக்கிறார்.

தமிழில் சிந்து சமவெளி படம் மூலம் நாயகனாக அறிமுகமானவர் ஹரிஷ். படத்தில் ஏகப்பட்ட நெருடல் காட்சிகள். படம் பலரிடமும் நெகடிவ் விமர்சனங்களை பெற்றது. தொடர்ந்து மாநகரம் படத்தின் மூலம் தனது கேரியரை வெற்றிகரமாக துவக்கினார்.

ஹரிஷ் கல்யாண்

தொடர்ந்து,பிக்பாஸ் சீசன் ஒன்றில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. கொஞ்ச நாட்கள் இருந்தாலும் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ரசிகர்கள் பெருவாரியாக ஹரிஷிற்கு ஆதரவு கொடுத்தார்கள். அவருக்கும் சக நடிகையான ரைசா வில்சனுக்கு காதல் வதந்திகள் உலா வர துவங்கியது. இருவரும் இதற்கு பெரிதாக மறுப்பு சொல்லவில்லை.

இந்நிலையில், ஹரிஷிற்கு பெண் பார்க்கும் படலம் துவங்கி விட்டதாக ஏற்கனவே செய்திகள் அடிப்பட்டன. இதை தொடர்ந்து, விஜயதசமி நாளில் புதிய துவக்கம் என சமூக வலைத்தளங்களில் பெண்ணுடன் கைக்கோர்த்த புகைப்படத்தினை வெளியிட்டு இருக்கிறார். மணப்பெண் குறித்த விவரங்கள் வெளியிடப்படாத நிலையில், ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Next Story