கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் விநோத கண்டிஷன் போடும் ஹரீஷ் கல்யாண்… இதெல்லாம் கொஞ்சம் ஓவரா தெரியல!!
நடிகர் ஹரீஷ் கல்யாண் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஹீரோவாக திகழ்ந்து வருகிறார். “சிந்து சமவெளி” திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ஹரீஷ் கல்யாண், “அரிது அரிது”, “சட்டப்படி குற்றம்”, “சந்தமாமா”, “பொறியாளன்” போன்ற பல திரைப்படங்களில் நடித்தார். எனினும் இத்திரைப்படங்கள் ஹரீஷ் கல்யாணின் கேரியருக்கு துரும்பளவும் உதவவில்லை.
இதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “பிக் பாஸ்” நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியின் மூலம் ஹரீஷ் கல்யாண் மிகப் பிரபலமாக அறியப்பட்டார்.
“பிக் பாஸ்” நிகழ்ச்சிக்கு பிறகு ஹரீஷ் கல்யாண் நடித்த “பியார் பிரேமா காதல்” திரைப்படம் குறிப்பிடத்தகுந்த வெற்றியை பெற்றது. அதனை தொடர்ந்து “இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்”, “தாராள பிரபு”, “ஓ மணப்பெண்ணே” போன்ற திரைப்படங்களில் நடித்தார். இத்திரைப்படங்களின் மூலம் இளம்பெண்களின் மனதில் ஒரு குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்தார் ஹரீஷ் கல்யாண். இவர் தற்போது “டீசல்”, "நூறு கோடி வானவில்" ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். இத்திரைப்படங்கள் விரைவில் திரையரங்குகளில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் ஹரீஷ் கல்யாண் தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் ஒரு விநோதமான கண்டிஷன் ஒன்றை போடுகிறாராம். அதாவது தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்கள் குறைந்த பட்சம் இரண்டு திரைப்படங்களாவது இயக்கியிருக்க வேண்டுமாம். அவ்வாறு குறைந்த பட்சம் இரண்டு திரைப்படங்களாவது இயக்கியிருந்தால்தான் அவர்களது கதைகளை கேட்பாராம்.
ஹரீஷ் கல்யாண் தமிழ் சினிமாவில் இப்போதுதான் ஒரு குறிப்பிடத்தக்க ஹீரோவாக வளர்ந்து வருகிறார். இந்த நிலையில் ஹரீஷ் கல்யாண் இவ்வாறு கண்டிஷன் போடுவதாக வெளிவரும் செய்தி ரசிகர்களை வியப்படைய வைத்துள்ளது.
இதையும் படிங்க: கார்த்தி நடித்த ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தை நேக்காக கவ்விக்கொண்டு போன ஆர்யா… கடைசில இப்படி ஆகிடுச்சே!!