ஹே நம்ம சார்மிங் நடிகர் ஹரிஸ் கல்யாண்-க்கு டும்டும்டும்...மணப்பெண் யாருனு தெரியுமா...?
பிரபல சினிமா வினியோகதஸ்தர் கல்யாணின் மகன் தான் நடிகர் ஹரிஸ் கல்யாண். தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார் ஹரிஸ். நடிக்க வந்த புதிதில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் கமிட் ஆகியிருந்தார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி இவருக்கு கைகொடுத்தது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஏராளமான படங்களில் கமிட் ஆன பிறகு மக்களின் அபிப்பிராயமான நடிகராக வலம் வந்தார்.
பியார் பிரேமா காதல் என்ற படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். இவரின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் ஓ மணப்பெண்ணே. இந்த படம் கணிசமான வெற்றியை பெற்று தந்தது.
இந்த நிலையில் இவரது பெற்றோர்கள் இவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு எடுத்துள்ளனர். அதனால் கண்டிப்பாக இது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணமாகத்தான் அமையும். 31 வயதான ஹரிஸ் தனது திருமணத்திற்கான ஏற்பாடுகளில் இறங்கி விட்டதாக தகவல் வெளியானது. இவரின் திருமணம் ஆகஸ்ட் கடைசி வாரம் அல்லது செப்டம்பரில் நடத்த முடிவு செய்துள்ளனர். விரைவில் மணப்பெண்ணுடன் கூடிய ஹரிஸ் கல்யாணின் புகைப்படங்களை வெளியிடுவர் என எதிர்பார்த்திருக்கின்றனர்.