
Cinema News
மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லும் ஹரிஷ் கல்யாண்.. ஓ இதுதான் சங்கதியா!
பிக்பாஸ் முதல் சீசனில் கிட்டத்தட்ட 50 நாள் நிகழ்ச்சி முடிந்தபின் போட்டியாளராக கலந்துகொண்டவர் நடிகர் ஹாரிஸ்க் கல்யாண். இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்கள் அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்றார். இதன்பின் இவருக்கு படவாய்ப்புகள் குவிந்தது.
இதன்பின் இவர் நடிப்பில் வெளியான பியார் பிரேமா காதல், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், தாராள பிரபு ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் அறிமுக இயக்குனர் கார்த்திக் சுந்தர் இயக்கத்தில் ஓ மணப்பெண்ணே என்ற படத்தில் நடித்துள்ளார்.

Oh Manapenne
இதில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக பிரியா பவானி ஷங்கர் நடித்துள்ளார். முழுக்க முழுக்க காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இப்படம் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வரும் 22ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படம் தெலுங்கில் விஜய் தேவரகொண்டா, ரித்து வர்மா நடிப்பில் ‘பெல்லி சூப்புலு’ என்ற பெயரில் வெளியாகி தேசிய விருது வென்றது குறிப்பிடத்தக்கது. தெலுங்கில் படம் வெளியானபோதே, தமிழில் விஷ்ணு விஷால், தமன்னாவை வைத்து அறிமுக இயக்குனர் இயக்கப்போவதாக தகவல் வந்தது.
இதை கவுதம் மேனன் தயாரிக்கப்போவதாகவும் கூறப்பட்டது. பின்னர் சில நாட்களில் அது கைவிடப்பட்டதாகவும் கூறப்பட்டது. அடுத்த வாரம் படம் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தை பிரபலப்படுத்துவதற்காக ஹரிஷ் கல்யாணம், பிரியா பவானி சங்கரும் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.
படம் வெளியாக இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில் எப்படியும் இந்த வாரத்தில் இவர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வார்கள் என தெரிகிறது.