லட்டு போல லாபத்தைக் கொடுத்த லப்பர் பந்து!.. ஹரிஷ் கல்யாணின் அடுத்த படத்துக்கு சிக்கலே இல்லையாம்!..

by Saranya M |   ( Updated:2025-04-02 06:55:17  )
லட்டு போல லாபத்தைக் கொடுத்த லப்பர் பந்து!.. ஹரிஷ் கல்யாணின் அடுத்த படத்துக்கு சிக்கலே இல்லையாம்!..
X

#image_title

தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் நடித்த லப்பர் பந்து திரைப்படம் கடந்த ஆண்டு தியேட்டர்க்காரங்களுக்கு மட்டுமின்றி ஓடிடி நிறுவனத்துக்கும் கோடான கோடி லாபத்தை லட்டு போல அள்ளிக் கொடுத்துள்ளதாம்.

அமலா பாலுக்கு ஜோடியாக சிந்து சமவெளி படத்தில் அப்பாவி பால் டப்பாவாக நடித்த ஹரிஷ் கல்யாண் பிக் பாஸ் முதல் சீசனில் ரைசா வில்சன் உடன் கடலை போட்டு வந்த நிலையில், அவருக்கு ஜோடியாகவே பியார் பிரேமா காதல் படத்தில் நடித்து அசத்தினார்.

பிரியா பவானி சங்கர் உடன் இணைந்து அவர் நடித்த ஓ மணப்பெண்ணே படம் எல்லாம் நல்லா ஓடும் என்று பார்த்தால், தோனி தயாரிப்பில் அவர் நடித்த எல்ஜிஎம் படம் வரை டல் அடித்து தயாரிப்பாளர்கள் தலையில் துண்டை போட்டது.

பார்க்கிங் படத்தின் மூலம் ராம்குமார் பாலகிருஷ்ணா அவருக்கு நல்ல வாழ்க்கையை அமைத்து தர அதை அப்படியே தமிழரசன் பச்சமுத்து லப்பர் பந்து படத்தின் மூலம் டாப்புக்கு கொண்டு சென்றுவிட்டார். அந்த படத்தை 9 கோடிக்கு வாங்கிய ஹாட்ஸ்டார் நிறுவனத்துக்கு 22 கோடி வரை லாபம் கிடைத்துள்ளதாம். அதன் காரணமாக அவரது அடுத்த படமான டீசல் படத்தையும் வாங்கும் முயற்சியில் அந்த நிறுவனம் இருப்பதாக கோலிவுட்டில் தகவல்கள் வெளியாகி உள்ளன.

சமீபத்தில், அந்த படத்துக்கு குரல் கொடுத்த இயக்குனர் வெற்றிமாறன் படம் நல்லா வந்திருக்கு என்றும் நல்ல ரிலீஸ் தேதியை பார்த்து ரிலீஸ் பண்ணால் இந்த வருடமும் ஹரிஷ் கல்யாணுக்கு வெற்றி தான் எனக் கூறிச்சென்றுள்ளார் என சினிமா வட்டாரத்தில் கூறுகின்ற்னார்.

Next Story