HarisKalyan:வெறித்தனமான போஸ்டரா இருக்கே.. புத்தாண்டையொட்டி புது பட அறிவிப்பை வெளியிட்ட ஹரீஸ் கல்யாண்

harish
HarisKalyan: தமிழ் சினிமாவில் வளரும் நடிகராக இருப்பவர் ஹரீஸ் கல்யாண். தொடர்ந்து பல நல்ல நல்ல படங்களை கொடுத்து வரும் ஹரீஸ் அடுத்ததாக அவருடைய 15வது பட அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். அந்த படத்தின் போஸ்டரை வெளியிட்டி புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்திருக்கிறார். ஆரம்பத்தில் இவர் நடித்த ஒரு சில படங்கள் மக்களிடையே சரியான வரவேற்பை பெறவில்லை.
அதன் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களின் ஆதரவை பெற்றார். அந்த ஆதரவோடு அவர் நடித்த படம்தான் பியார் பிரேமா காதல் .இந்தப் படம் இளசுகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று தொடர்ந்து ஹரீஸ் கல்யாணுக்கும் பட வாய்ப்புகள் வரக் காரணமாக அமைந்தது. அதுவரை சினிமாவில் தன்னால் நிலைத்து நிற்க முடியுமா என்ற சந்தேகத்தில் இருந்த ஹரீஸ் கல்யாணுக்கு இந்தப் படம் தான் பெரும் நம்பிக்கையை தந்தது.
இந்தப் படத்திற்கு பிறகு டீசல், ஸ்டார், பார்க்கிங், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் போன்ற படங்களில் நடித்தார். பெரிய பட்ஜெட் படங்கள் இல்லையென்றாலும் நல்ல கதையம்சத்தோடு கூடிய படங்களில் நடித்ததினால் இவருக்கு என ஒரு தனி மார்கெட் உருவாகியது. இவருடைய நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் லப்பர் பந்து. ப்ளாஸ் பஸ்டர் வெற்றியடைந்தது.

அதிலும் பார்க்கிங் படமும் இன்றுவரை அனைவரும் விரும்பும் படமாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில்தான் தன்னுடைய 15வது படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டிருக்கிறார் ஹரீஸ் கல்யாண். இந்தப் படத்தை லிஃப்ட் பட இயக்குனர் வினீதி வரப்பிரசாத் இயக்குகிறார். இது ஒரு ஆக்ஷன் திரில்லர் படமாக அமைய இருக்கிறது. போஸ்டரை பார்க்கும் போதே படம் மாஸாக இருக்கும் என்று தெரிகிறது.