கையில ஒன்னும் தெறியலயே...! எதாவது இருக்குமோ?

by Rohini |
Harish_main_cine
X

ஹரிஷ் கல்யாண் அமலாபாலுடன் சிந்து சமவெளி படத்தில் இணைந்து நடித்த முதல் திரைப்படம். . இதன்பின் பொறியாளன், வில் அம்பு என பல படங்களில் நாயகனாக நடித்தார். இந்தப்படங்கள் மக்கள் மத்தியில் பெரிதாக பேசப்படவில்லை.

இதன்பின் பிக்பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்துகொணடு பலராலும் பரவலாக அறியப்பட்டார். இதன்பின் இவர் நடிப்பில் வெளியான பியார் பிரேமா காதல், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், தாராள பிரபு ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

harish1_cine

தற்போது இவர் அறிமுக இயக்குனர் கார்த்திக் சுந்தர் இயக்கத்தில் ஓ மணப்பெண்ணே என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக பிரியா பவானி ஷங்கர் நடித்துள்ளார். இப்படம் சமீபத்தில் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகி அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்றது.

harish2_cine

ஹரிஷ் கல்யாணம் சில புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.இந்நிலையில் ஹரிஷ் கல்யாண் மற்றும் பிரியா பவானி ஷங்கர் இருவரும் இணைந்து மீண்டும் ஒரு புதிய படத்தில் நடிக உள்ளதாக தகவல் வந்துள்ளது. இந்த நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர்க்ளுக்கு குட்மார்னிங் சொல்லும் என்னுடைய ஸ்டைல் என்று போட்டோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

Next Story