லியோ கதை!.. அர்ஜுனின் என்ட்ரி இடைவேளையில் தானா!.. இதில் டீகோடிங் செய்ய இத்தனை விஷயம் இருக்கா?..

நடிகர் விஜய்யின் 67வது படமாக உருவாகி உள்ள லியோ படம் இன்னும் 65 நாட்களில் வெளியாக உள்ள நிலையில், இனி தினமும் லியோ படத்தின் அப்டேட்கள் மற்றும் ஹைப்புகள் தான் எகிறும் என தெரிகிறது.

ஆக்‌ஷன் கிங் அர்ஜுனின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான ஹரோல்ட் தாஸ் க்ளிம்ஸை பார்த்த ரசிகர்கள் அப்படியே ரோலக்ஸ் போலவே உள்ளது என்றும் ரோலக்ஸை விட 10 மடங்கு வெறித்தனமாக இருக்கிறது என்றும் இன்னொரு ரோலக்ஸ் கதாபாத்திரத்தை கண்ணில் காட்டிய லோகேஷ் கனகராஜ் என்றும் பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: மிரட்டலாக எண்ட்ரி கொடுக்கும் ஹரால்ட் தாஸ்… லியோ படத்தில் அர்ஜூன் இவருக்கு தம்பியா?

ஹாலிவுட் படத்தின் கதை:

லியோ படமே ஹாலிவுட் படமான ஹிஸ்டரி ஆஃப் வயலென்ஸ் படத்தின் கதை தான் என்றும் இடைவேளை காட்சியின் போது அண்ணன் சஞ்சய் தத்தை விஜய் போட்டுத் தள்ளிய பின்னர் தம்பி அர்ஜுன் பழிவாங்க துடிக்கும் காட்சியாக இந்த சீன் இருக்கும் என்று செய்யாறு பாலு தனது புதிய வீடியோவில் லியோ படத்தின் கதையை டீகோடு செய்துள்ளார்.

மேலும், இந்த படம் விக்ரம் படத்தின் தொடர்ச்சியாகவும் இருக்கலாம் என்றும் பகத் ஃபாசில் காஷ்மீர் கனெக்டிவிட்டி விக்ரம் படத்திலேயே இருந்தது என்றும் கூறியுள்ளார். அர்ஜுன் எழுமலை படத்தில் சொல்லும் வசனத்தை அப்படியே கொண்டு வந்து இங்கே லோகேஷ் கனகராஜ் வைத்துள்ளார் என்றும் கூறுகின்றனர்.

இதையும் படிங்க: சம்பளம் அதிகமா வாங்கிட்டா நீங்க சூப்பர்ஸ்டாரா? அவர் இடத்துக்கு நீங்க வர முடியாது.. தளபதியை வறுத்தெடுத்த பிரபலம்

ஹரோல்ட் தாஸ் vs லியோ:

தான் பார்த்து வளர்ந்த நடிகர்களை இப்போ எப்படி வெயிட்டா காட்டணும் என்பதை நன்கு புரிந்து வைத்துக் கொண்டு படம் எடுத்து வருகிறார் லோகேஷ் கனகராஜ் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஹரோல்ட் தாஸாக அர்ஜுனை காட்டும் இந்த 41 நொடி வீடியோவிலேயே நடிகர் விஜய் தான் அந்த இடத்தில் உட்கார்ந்து இருக்கிறார் என்றும் அவரை தவிர வேறு யாராகவும் இருக்க வாய்ப்புகள் கம்மி என்றும் லியோ படம் வெளியானால் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய கேங்ஸ்டர் படமாக இருக்கும் என்றும் ஏகப்பட்ட சுவாரஸ்ய தகவல்களை சொல்லி உள்ளார்.

இதையும் படிங்க: அசராமல் அடிக்கும் ஜெயிலர்!.. வெறித்தனமான வசூல்!.. 5 நாள் வசூல் எத்தனை கோடி தெரியுமா?!..

 

Related Articles

Next Story