ரோலெக்ஸுக்கே டஃப் கொடுக்கும் ஹரோல்டு தாஸ் அர்ஜூன்.. மிரட்டலான லியோ க்ளிம்ஸ் வீடியோ

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய், த்ரிஷா, பிரியா ஆனந்த், அர்ஜூன், மன்சூர் அலிகான், சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் லியோ. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதற்கு முன்னர் லோகேஷ் இயக்கிய மற்ற படங்கள் எல்லாம் நல்ல வரவேற்பை பெற்றது. லியோ திரைப்படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாகவுள்ளது. லியோ படத்தில் நடித்த நடிகர்களை எங்கு பார்த்தாலும், லியோ படத்தின் அப்டேட்டை தான் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க- முதல்முறையாக விஜயுடன் இணையும் கமல்?!.. லியோ படத்தில் லோகேஷ் வைத்திருக்கும் தரமான சஸ்பென்ஸ்..

இந்த படத்திலிருந்து நான் ரெடி தான் வரவா என்ற பாடல் வெளியாகி, நல்ல வரவேற்பை பெற்றது. இதுவரை யூடியூபில் 99 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. மேலும் இதற்கு முன்னர் சஞ்சய் தத் பிறந்தநாள் அன்று அவரின் கேரட்கடரை அறிவிக்கும் வகையில் ஒரு க்ளிம்ஸ் வீடியோ வெளியிடப்பட்டிருந்தது.

அதில் அவரின் பெயர் ஆண்டனி தாஸ் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று நடிகர் அர்ஜுனின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரின் கேரக்கடரை ரிவீல் செய்யும் க்ளிம்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது. இன்று மாலை 5 மணிக்கு வெளியான இந்த வீடியோவில், இது வரை பார்க்காத மிரட்டலான வகையில் அர்ஜுன் இருக்கிறார்.

அந்த வீடியோவில், கோபமாக உள்ளே வரும் அர்ஜுன் ஒருவரின் கையை வெட்டுகிறார். அதன் பின்னர் திரும்பி த்தெரிக்க.. என்று கம்பீரமாக கூறுவதோடு அந்த க்ளிம்ஸ் வீடியோ முடிகிறது. இந்த படத்தில் அர்ஜுனின் பெயர் ஹரோல்டு தாஸ் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க- லியோ க்ளிம்ஸ் வீடியோவை வெளியிட்டதே திசைத்திருப்ப தான்.. அட இப்படி ஒரு உள்குத்து இருக்கா?

 

Related Articles

Next Story