ஹரிஷ் ஜெயராஜால் தூக்கப்பட்ட பிரபல நடிகை… ஓகே ஓகே படத்தில் இதெல்லாம் நடந்து இருக்கா?
OKOK: உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் முதல் படமான ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் அவர் இணைந்தது குறித்த தகவல் மட்டுமல்லாமல் கேமியோ ரோலுக்கு நடித்த நடிகை குறித்த ஆச்சரிய தகவலும் வெளியாகி இருக்கிறது.
உதயநிதி ஸ்டாலின் ஆதவன் படத்தினை தயாரித்த போதே அவரை கிளைமேக்ஸில் கேமியோவாக நடிக்க வைக்க கே.எஸ்.ரவிகுமார் கேட்டு இருக்கிறார். ஆனால் முதலில் அவர் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லையாம். நிறைய டயலாக் கொடுத்த நிலையில் இதெல்லாம் என்னால் பேச முடியாது எனவும் மறுத்துவிட்டாராம். அவரை சமாதானம் செய்த பின்னரே அப்படத்தில் நடித்தாராம்.
இதையும் படிங்க: கோட் படத்தில் குட்டி விஜய் இந்த பிரபலத்தின் மகனா? விஜய் என்ன கேட்டார் தெரியுமா?
இதை தொடர்ந்து பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தின் போது உங்க படம் நல்லா இருக்கும் சார் என இயக்குனர் ராஜேஷிடம் உதயநிதி கூறி இருக்கிறார். அவர் ஒரு ஒன்லைன் இருக்கு கேட்குறீங்களா என ஓகே ஓகே படத்தின் லைனை சொல்ல உதயநிதி ரொம்பவே இம்ப்ரஸ் ஆகிவிட்டாராம்.
இதை தொடர்ந்து, அவரிடம் உடனே படத்தினை எடுக்கலாமா என உதயநிதி கேட்க அவர் இருங்க சார் இப்போதான் ஒன்லைன் சொல்லிருக்கேன். இனிமேல்தான் முழு படத்தினையும் எழுதணும் என்கிறார். பின்னர் ஒருவழியாக படத்தினை தொடங்கும் முன் உதயநிதிக்கு பைக் ஓட்டவே தெரியாதாம். அதனால் உதவி இயக்குனராக இருந்த பொன்ராமுடன் சென்னையை சுற்றி கற்றுக்கொண்டு இருக்கிறார்.
இதையும் படிங்க: நீங்க தங்கம் சார்… ரஜினிகாந்த் குறித்து அந்த ஸ்டாரே இப்படி சொல்லிட்டாரே…
ஒரு கட்டத்தில் படத்தின் மொத்த காட்சிகளுமே 4.5 மணி நேரம் தாண்டியதாம். ஆண்ட்ரியா மற்றும் சந்தானத்துக்கு ஒரு லவ் டிராக்கே அப்படத்தில் இருந்ததாம். இருந்தும் படத்தின் நீளம் அதிகம் இருந்ததால் எடிட்டிங்கில் அந்த காட்சிகளை எல்லாம் நீக்க சொல்லி இருக்கிறார் இசையமைப்பாளர் ஹரிஸ் ஜெயராஜ். அறிமுக ஹீரோ ரசிகர்கள் தியேட்டரில் உட்கார மாட்டார்கள். சண்டைக்காட்சிகள் கூட இல்லை எனச் சொல்லி அதையெல்லாம் எடுத்துவிட்டதாக கூறப்படுகிறது.