ஆசைக்கு ஒரு மகன்.. ஆஸ்திக்கு ஒரு மகனாக வாழ்ந்த அரவிந்த்சாமி! அட இவருக்கு பின்னாடி இப்படி ஒரு ரகசியமா?

Published on: June 30, 2023
aravind
---Advertisement---

90கள் காலகட்டத்தில் பெரும்பாலான பெண்களிடம் உனக்கு எப்படிப்பட்ட மாப்பிள்ளை வேண்டும் என்று கேட்டால் யோசிக்காமல் அவர்கள் கூறுவது அரவிந்த்சாமி போன்ற மாப்பிள்ளை கிடைத்தால் அதைவிட பாக்கியம் எங்களுக்கு வேறு இல்லை என்பதுதான். மேலும் பல பேரை கிண்டலடித்து கூறுவதும் அரவிந்த்சாமியின் கலரை வைத்து தான். இவரு பெரிய அரவிந்தசாமி கலரு என்று பெரும்பாலானோர் கூறி கேள்விப்பட்டிருப்போம்.

aravind1
aravind1

கொடிகட்டி பறந்த அரவிந்த்சாமி

ஏன் இந்தியன் படத்தில் கூட செந்திலின் மகனுக்கு அரவிந்த்சாமி என பெயர் வைத்திருப்பார். அதை கவுண்டமணி அடுப்புல வெந்தசாமி என பெயர் வைத்திருக்க வேண்டியது தானே என நக்கலாக சொல்லி சிரிக்க வைத்திருப்பார். அந்த அளவுக்கு தமிழ் சினிமாவில் ஒரு ஆண் அழகனாகவே வலம் வந்தவர் நம்ம ஹீரோ அரவிந்த்சாமி.

ஆரம்ப காலத்தில் இவருடைய விருப்பம் ஒரு டாக்டராக வேண்டும் என்பதே. மேலும் தன்னுடைய பாக்கெட் மணிக்காக மாடலிங் துறையில் நுழைந்தார் அரவிந்த்சாமி. அப்போது தூர்தர்ஷனில் ஒளிபரப்பான ஒரு காபி விளம்பரத்தில் அரவிந்த் சாமியை பார்த்து மணிரத்தினம் முதன் முதலில் கொடுத்த வாய்ப்புதான் தளபதி.

திருப்புமுனையை ஏற்படுத்திய படம்

அதனை அடுத்து ரோஜா படம் அவருக்கு ஒரு பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து பாம்பே திரைப்படம் . அரவிந்த் சாமியை எங்கேயோ கொண்டு போய் சேர்த்தது. தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் போன்ற மொழி படங்களிலும் தன்னுடைய வருகையை உறுதி செய்தார் அரவிந்த்சாமி.

இப்படி பல படங்களை கொடுத்து வந்த அரவிந்தசாமி திடீரென சினிமாவில் இருந்து விலகி இருந்தார். காரணம் 1994 ஆம் ஆண்டில் காயத்ரி என்ற பெண்ணை திருமணம் செய்த அரவிந்தசாமி 2014 ஆம் ஆண்டில் அவர் மனைவியை விட்டு பிரிந்து சென்றாராம். அதன் பிறகு அவருடைய குழந்தைகளை அவருடைய பாதுகாப்பிலேயே வளர்த்து வருகிறாராம் அரவிந்த்சாமி.

aravind2
aravind2

மேலும் அரவிந்தசாமியின் தந்தை சீரியல் நடிகர் டெல்லி குமார் என்று பல பேர் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இதைப் பற்றி பிரபல பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு ஒரு சுவாரசிய தகவலை கூறினார். அவர் அரவிந்தசாமியை பற்றி குறிப்பிடும் போது அவருடைய தந்தை வி.டி.சுவாமி என கூறியிருந்தார்.

வளர்ப்பு மகனா?

இதைக் குறிக்கிட்டு தொகுப்பாளர் அரவிந்தசாமி ஒரு வளர்ப்பு மகன் எனக் கூறுகிறார்களே அது உண்மையா? எனக் கேட்டார். அதற்கு பதில் அளித்த செய்யாறு பாலு “அப்படியும் சில பேர் கூறுகிறார்கள். ஆனால் அது எந்த அளவுக்கு உண்மை என தெரியவில்லை. மேலும் அவருடைய சொந்த விஷயங்களைப் பற்றி இதுவரை அரவிந்த்சாமி யாரிடமும் சொன்னதும் இல்லை.

அதைப்பற்றி கேட்டாலும் அதை அப்படியே அவாய்ட் பண்ணி விடுவார். மேலும் எந்த ஒரு பொது விழாக்களிலும் அவருடைய குடும்ப உறுப்பினர்களை அழைத்து வந்ததும் இல்லை. மேலும் கதீட்ரல் ரோடில் தனியாக ஒரு பங்களா எடுத்து இருக்கும் அரவிந்தசாமி அங்குதான் நடிகர் டெல்லி குமாரும் இருப்பதாக சொல்கிறார்கள்”என்று கூறினார்.

aravind3
aravind3

ஆனால் இதைப் பற்றி வெளியே சில பேர் அரவிந்தசாமி பிறந்ததும் அவருடைய சிறு வயதிலேயே டெல்லி குமார் அவருடைய உறவினரான சுவாமியிடம் தத்து கொடுத்து விட்டதாக கூறுகிறார்கள். இப்போது அரவிந்தசாமியின் தந்தை என சொல்லப்படும் வி டி சுவாமி ஒரு பெரிய தொழிலதிபராம். இவருடைய அம்மா ஒரு பரதநாட்டிய கலைஞராம்.

இதையும் படிங்க : விக்ரம் படத்தின் எதிரொலியா? கமல்- எச்.வினோத் கூட்டணியில் கைகோர்க்கும் அந்த நடிகர்?

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.