நானும் எவ்ளவோ ட்ரை பண்றேன்.. முடியல! அனுஷ்கா இப்படி போவாங்கனு நினைக்கல

by ராம் சுதன் |
Anushka
X

தமிழ் திரையுலகில் ஒரு அம்சமான நடிகையாக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை. தமிழ் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தார் நடிகை அனுஷ்கா.

ஆரம்பத்தில் கிளாமர் ரோலில் நடித்து ஓரளவு இடம் பிடித்த அனுஷ்கா போகப்போக பெண்களை மையப்படுத்தி எடுக்கும் கதாபாத்திரங்களில் நடித்து ஒரு பலம் வாய்ந்த ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருக்கும் முன்னணி நடிகையாக மாறினார்.

அருந்ததி படம் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி கொடுத்த படமாக அமைந்தது. அதுவரை யாரும் பார்த்திராத அனுஷ்காவை இந்த அருந்ததி படத்தின் மூலம் பார்த்து ரசிகர்கள் பிரமித்து போயிருந்தார்கள்.

அந்தப் படத்தின் வெற்றி மற்றும் அவருடைய நடிப்பு ஆகியவற்றால் அவருக்கு அடுத்தடுத்து கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த பட வாய்ப்புகளை அள்ளிக் கொடுத்தது.

அதில் ஒன்றுதான் பாகுபலி. அந்தப் படம் இன்னும் பெரிய வரவேற்பை அனுஷ்காவிற்கு பெற்றுக் கொடுத்தது.

பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்தில் படம் முழுக்க வரும் அனுஷ்கா முதல் பாகம் முடிந்ததும் அவருடைய உடல் எடையில் மாற்றம் ஏற்பட்டது.

அதற்கு முன்னதாக ஆர்யாவுடன் ஒரு படத்தில் குண்டு பெண்மணியாக நடிக்க தன்னுடைய உடல் எடையை 100 கிலோவுக்கும் அதிகமாக ஏற்று இருந்தால் அனுஷ்கா. அதன் பிறகு தான் பாகுபலி படத்தின் இரண்டாம் பாகம் தயாரானது. அந்த படத்தில் ஓரளவு வரை தான் எடையை குறைக்க முடிந்தது. அதற்காக சிஜி வேலைகள் செய்துதான் அனுஷ்காவை ஒல்லியாக காட்டியிருந்தார்கள்.

பாகுபலி படத்திற்கு பிறகு அனுஷ்காவிற்கு சொல்லிக் கொள்ளும் வகையில் எந்த படமும் எடுபடவில்லை

அதற்கு காரணம் அவருடைய உடல் எடைதான். சமீப காலமாக அனுஷ்காவை நாம் பார்க்கவும் முடிவதில்லை .இதை குறிப்பிட்ட பேசிய சித்ரா லட்சுமணன் அனுஷ்காவிற்கு நடிக்கும் எண்ணமும் இல்லை. அவர் உடல் பிரச்சனையை தீர்த்துக் கொள்ளவும் முடியவில்லை. அதனால் தான் பீல்ட் அவுட் ஆகிவிட்டார் போல என கூறி இருந்தார்.

Next Story