ஆங்கிலம் பேச மறுத்த சிவாஜி.. அதுவும் சீரியலிலா?.. அதென்னப்பா சீரியல்?..

sivaji
நாடகங்களில் சிறுகதைகளி வெள்ளித்திரைகளில் பெரிய ஆளுமையாக இருந்த சிவாஜி ஒரு கட்டத்தில் சீரியலில் நடிக்க ஆர்வம் காட்டாமல் இருந்திருக்கிறார். அவருக்கு இத்தனை பெருமைகளை அள்ளிக் கொடுத்தது சினிமா மட்டும் தான். இத்தனை கோடி பேரை சென்றடைந்திருக்கிறார் என்றால் சினிமா ஒன்று மட்டுமே காரணமாகும்.

sivaji1
இந்த காரணத்தினால் சீரியலில் நடிக்க விருப்பமில்லாமல் இருந்தாராம். இன்னொரு பக்கம் சிவாஜியின் பார்வையில் சினிமாவிற்கு போட்டியே சீரியல் தான் என்று நினைத்துக் கொண்டிருந்தாராம். அப்படி சினிமாவிற்கு போட்டியாக இருக்கும் சீரியலில் தான் எப்படி நடிக்க முடியும் என்ற கொள்கையில் இருந்திருக்கிறார் சிவாஜி.
அதற்கு காரணம் சிவாஜியை வளர்த்து விட்டது சினிமாதானே. ஆனாலும் அவரை எப்படியாவது சீரியலில் நடிக்க வைக்க வேண்டும் என்று பிரபல எழுத்தாளரும் இயக்குனருமான பரத் முயன்றிருக்கிறார். ஆனால் சிவாஜி ஒரேடியாக மறுத்தாராம். அதன் பிறகு தான் ‘மீண்டும் கௌரவம்’ என்ற சீரியலில் சிறப்பு தோற்றத்தில் நடித்தாராம்.

meendum gauravam
அதுவும் அந்த சீரியலில் ஒரு கிரிமினல் வக்கிலாக சிவாஜிக்கு கதாபாத்திரம். அப்போது இயக்குனர் பரத் ஆங்கிலத்தில் சில வசனங்களை கூற சிவாஜி என்னால் ஆங்கிலத்தில் பேச முடியாது என்று சொன்னாராம். ஆனாலும் பரத் விட்டபாடில்லை. ஆனால் சிவாஜி என்னால முடியாது, அதுக்கு மேல நீ பாத்துக்கோ என்று சொன்னாராம்.
உடனே பரத் அவரது உதவியாளரை அழைத்து ‘சிவாஜி ஏதோ சொல்கிறார் பாரு’ என்று அவர் வேலையை பார்க்க போய்விட்டாராம். அந்த உதவியாளர் சிவாஜியிடம் ‘ஐயா நீங்கள் ஆங்கிலம் பேசும் அழகே வேற, அந்த பிரிட்டிஷ் காரனே ஆங்கிலம் பேசினாலும் உங்க முன்னாடி எடுபடாது ’ என்று கூற அதற்கு சிவாஜி ‘அது தான் நான் பண்ண தப்பு, எல்லாத்தையும் தத்ரூபமா செய்துவிட்டேன்ல அதான் தப்பு’என்று சொல்லியிருக்கிறார்.

bharath
அதன் பிறகு சிவாஜி இரண்டு வரிகளை மட்டும் ஆங்கிலத்தில் சொல்லி மிதமுள்ள வரிகளை அவருக்கே உரிய பாணியில் கூறி படப்பிடிப்பில் கைத்தட்டல்களை வாங்கியிருக்கிறார். இந்த சுவாரஸ்ய தகவலை இயக்குனர் எழுத்தாளர் பரத் கூறினர்.
இதையும் படிங்க : இந்தியாவின் முதல் 3D திரைப்படம் உருவானது இப்படித்தான்… வேற லெவல் பண்ணிருக்காங்களே!!