வலிமை சாத்தன் பின்னணியில் இவளோ பெரிய கதை இருக்கா?! 1967 முதல்...

by Manikandan |
வலிமை சாத்தன் பின்னணியில் இவளோ பெரிய கதை இருக்கா?! 1967 முதல்...
X

அஜித் நடிப்பில் வரும் 24-ஆம் தேதி உலகமெங்கும் தமி,ழ் தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என பிரம்மாண்டமாக வெளியாக உள்ள திரைப்படம் வலிமை. இந்த படத்தை சதுரங்கவேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தை இயக்கிய வினோத் இயக்கியுள்ளார்.

நேர்கொண்ட பார்வை திரைப்படத்திற்கு பிறகு அஜித்துடன் வினோத் பயணித்துள்ளார். வினோத் தனது முதல் இரண்டு படங்களை மிகவும் ஆராய்ச்சி செய்து தெளிவான திரைக்கதை அமைத்து கதையின் ஆணிவேர் வரை அனைத்தும் ரசிகனுக்கு புரியும்படி காட்சிப்படுத்தி இருப்பார்.

தற்போது, அதேபோல வலிமை படத்திலும் சாத்தானின் பிள்ளைகள் எனும் வில்லன் கதாபாத்திரங்களை உண்மை கலந்து பதிவு எடுத்துள்ளாராம். இந்த செய்தி வலிமை ட்ரெய்லரில் நமக்கு வெளிப்படையாக தெரிந்தது. அந்த சாத்தானின் பிள்ளைகள் எனக்கூறப்படும் அந்த குழு யார் என்ற தகவல் பலர் இணையத்தில் கூறியுள்ளனர்.

valimai

அதன்படி, 1867 ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் சாத்தான் வழிபாடு நடத்தும் குழு இதனை ஆரம்பித்ததன். இவர்கள், நோக்கம் விலையுயர்ந்த பைக்குகளை வாங்கி அதனை மற்றவர்களை பயமுறுத்தும் வண்ணம் ஓட்டிச்சென்று பல சமூக குற்றங்களை செய்வதாகும்.

கொலை, கடத்தல், கொள்ளை, போதைப்பொருள் கடத்தல், கற்பழிப்பு என பல குற்றங்களை இவர்கள் செய்வார்கள். இவர்கள் தங்களை சாத்தானின் பிள்ளைகள் என்று அடையாளப் படுத்திக் கொள்வார்களாம். இந்த சாத்தானின் பிள்ளைகள் சாத்தான் வழிபாடு சாத்தான் கோட்பாடுகள் என பலவற்றை பின்பற்றி வருகின்றனராம்.

valimai

உடம்பில் மற்றவர்கள் பயப்படும் வண்ணம் டாட்டூள் போடுவது. மற்றவர்களை பயமுறுத்தும் வண்ணம் உடைகள் அணிவது, தாறுமாறாக படுவேகமாக பைக்குகளை ஒட்டுவது என பல குற்ற சம்பவங்களில் செய்து வருவார்களாம். இவர்களைப் பற்றி கண்டிப்பாக வினோத் ஓர் குறும்படத்தை வலிமையில் வைத்திருப்பார் என்பது என கூறப்படுகிறது. எப்படியும் எல்லாம் வரும் 24ஆம் தேதி தெரிந்துவிடும்.

இதையும் படியுங்களேன்-RRR-ஐ கண்டு தெறித்து ஓடிய சிவகார்த்திகேயன்.! பேருல மட்டும் தான் ‘டான்’.!

valimai

Next Story