ரசிக்க வருவாரா தளபதி? கலைஞர் 100 விழாவில் கருணாநிதியுடன் இருந்து விஜய் செய்ய ஆசைப்பட்டது என்ன தெரியுமா?

Published on: January 6, 2024
vijay
---Advertisement---

Actor Vijay: தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்த்தி விஜய் தற்போது தளபதி 68 படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அதற்கான படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. வெங்கட்பிரபு இயக்கும் இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சௌத்ரி மற்றும் சினேகா ஆகியோர் நடிக்கிறார்கள். அவர்களுடன் பிரசாந்த், பிரபுதேவா போன்ற முக்கிய நடிகர்களும் நடித்து வருகிறார்கள். முதற்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து முடிந்தது.இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடப்பதால்,

இதையும் படிங்க: போலீஸுடன் வீட்டுவந்த கணேஷ்!.. அமிர்தா பிரச்னை முடியுமா? முடியாதா? என்னங்கடா!..

இன்று நடக்கவுள்ள கலைஞர் 100 விழாவிற்கு விஜய் வர வாய்ப்பிருப்பதாகவே தெரிகிறது. ஆனால்  சமூக வலைதளங்களில் விஜய் அந்த விழாவில் கலந்து கொள்ள போவதில்லை என்ற வதந்திகளை பரப்பி வருகின்றனர். ஒட்டுமொத்த திரையுலகமே இன்று மாலை அந்த விழாவில் ஒன்று கூட இருக்கிறார்கள்.

விஜய், அஜித்  மட்டும் சந்தேகத்தில் இருக்கின்றனர். அஜித் படப்பிடிப்பிற்காக அஜர்பைஜானில் இருப்பதாக நேற்றைய தகவல் கூறுகின்றது. ஆனால் அவரும் திடீரென இன்று சென்னை வந்துவிட்டதாக சொல்லப்படுகின்றது.

இதையும் படிங்க: மீனாவிடம் அலப்பறையை கூட்டிய விஜயா!.. மனோஜின் சேட்டையை கண்டுப்பிடித்த முத்து!

இந்த நிலையில் ஏற்கனவே நடிகர்கள் ஒன்று சேர்ந்து கலைஞருக்கு முன்பு ஒரு விழா எடுத்து கொண்டாடினார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். அதில் கூட அஜித் பேசியது மிகவும் வைரலானது. அந்த நேரத்தில் விஜய் பேசிய ஒரு வீடியோ இன்று வைரலாகி வருகின்றது.

அதில் விஜய் ‘கலைஞர் நகர் என்று ஆரம்பிக்கப் போவதாக கேள்விப்பட்டேன். அதுமட்டும் போதாது. அந்த இடத்தில் கலைஞருக்கு ஒரு சிலையும் வைக்க வேண்டும். அவரது 100வது வயதில் ஒரு விழா எடுத்து அந்த விழாவில் கலைஞருடன் சேர்ந்து நானும் அந்த சிலையை ரசிக்க வேண்டும் ’ என்று கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: எவ்வளவு அவமானம்.. அசிங்கம்.. கண்ணீர் விட்டு அழுதேன்!.. பருத்திவீரன் பற்றி பேசும் சூர்யா…

இந்த வீடியோதான் இப்போது வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அன்று சொன்னதை இன்று செய்வாரா விஜய் என அவரின் வருகையை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.