
Cinema History
ஆள் இன் ஆள் அழகுராஜா முதல்., சாக்ரடீஸ் சவுண்ட்ஸ் வரை.! கவுண்டமணியின் களோபர லிஸ்ட் இதோ..,
தமிழ் சினிமாவில் இவருடைய இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்று ஒரு சில ஜாம்பவான்களில் முக்கியமான ஒருவர் கவுண்டமணி. இவரது கவுண்டர்களுக்கும், அரசியல் காலாய் வசனங்களுக்கும் ரசிகர்களாக இல்லாதோர் தமிழ் சினிமாவை ரசிக்க தெரியாதோர் என்று கூறலாம்.
இன்று தனது 83வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். மேலும், இவரது காமெடிகளை பகிர்ந்து வருகின்றனர். இவர் கவுண்டர்களுக்கு எவ்வளவு மெனெக்கெடுவாரோ,
அதே போல, தான் சார்ந்திருக்கும் கடை பெயருக்கும் மெனெக்கெடுவார். அது வித்தியாசமாக தெரிய வேண்டும் என மேனிக்குவார் போல. அப்படி அவர் அறிமுகப்படுத்திய சில களோபர கடை தலைப்புகள் இதோ..,
இதையும் படியுங்களேன் – ரஜினியை நம்பி இருந்தது போதும்!..அடுத்த வேலையை ஆரம்பித்த மெகா ஹிட் இளம் இயக்குனர்..!
அகில இந்திய தமிழ்நாடு இனிப்புகள், ஆள் இன் ஆள் அழகுராஜா சைக்கிள் கடை, இன்டர்நேஷனல் இசக்கிராஜா கடை, சாக்ரடிஸ் சவுண்ட் சர்வீஸ், குபேரன் அன்ட் கோ, சித்தப்பு சலூன் என ஏராளமான ஏடாகூடமான டைட்டில்களை வைத்துள்ளார் கவுண்டமணி.
இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும், இவரை போல ஹீரோ, வில்லன் , ஹீரோயின் , அரசியல் என பாரபட்சம் பாராமல் கவுண்டர் அடிக்கும் நபரை மீண்டும் கொண்டு வருவது மிக கடினம். இவரை காப்பி அடித்து வேண்டுமானால் பல காமெடியங்கள் உருவாகலாம் ஆனால் அதற்கு விதை கவுண்டமணி போட்டதாக தான் இருக்கும்.