More
Categories: Cinema News latest news

இவர்தான் தமிழ் சினிமாவின் சிறந்த ஸ்கிரிப்ட் ரைட்டர்..! வெளிப்படையாக சொன்ன மாரிமுத்து.. அவர் யார் தெரியுமா..?

தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர்களில் ஒருவர் சேரன். திரைப்படங்களில் தனது வாழ்க்கையைத் தொடர சென்னை வந்தார். ஆரம்பத்தில் அவர் சில திரைப்படங்களில் தயாரிப்பு மேலாளராக பணி புரிந்தார். கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் ”புரியாத புதிர்” என்ற திரைப்படத்தில் முதன் முதலாய் உதவி இயக்குனராக பணியாற்றினார். அதனைத் தொடர்ந்து ”சேரன் பாண்டியன்” முதல் ”நாட்டாமை” வரை அவருடன் இணைந்து பணியாற்றினார். பின்னர் கமல்ஹாசனுடன் இணைந்து ”மகாநதி” படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினார்.

பின்னர் இயக்குனராக அவதாரம் எடுத்தார். பார்த்திபன் மற்றும் மீனா நடித்த ”பாரதி கண்ணம்மா” என்னும் திரைப்படத்தை இயக்கினார். இது மிகப்பெரிய சர்ச்சையை உருவாக்கினாலும் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியா அமைந்தது. தொடர்ந்து அதை தொடர்ந்து ”பொற்காலம்”, ”வெற்றிக் கொடி கட்டு”,”பாண்டவர் பூமி” போன்ற சமூக அவலங்களை சித்தரித்தே திரைப்படம் இயக்கினார். இவருடைய படங்கள் யாவும் சமூக மாற்றத்தையும், சாதாரண தமிழ் நாட்டுப்புற மக்களின் வாழ்வையும் அடிப்படையாகக் கொண்டுள்ளன. அதை தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களையும் தயாரித்துள்ளார்.

Advertising
Advertising

2002 ஆம் ஆண்டு இயக்குனர் தங்கர் பச்சான் என்பவர் இயக்கிய ”சொல்ல மறந்த கதை” என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் இவரின் நடிப்புத்திறன் பரவலாக பேசப்பட்டு பாராட்டும் பெற்றார். பின்னர் ”பொக்கிசம்” என்ற படத்தில் நடிப்பதாக இருந்து பின்னர் கைவிடப்பட்டது.” ஆட்டோகிராப்” படம் தயாரானது. பின்னர் அதில் இவரே கதாநாயகனாக நடித்து மற்றும் இயக்கவும் செய்தார். இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது. அதன் பிறகு 2004 இல் ஆரம்பித்த ”பொக்கிசம்” இவர் நடிப்பில் 2009 ஆம் ஆண்டில் வெளிவந்தது. அதை தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்தார். பின்னர் 2019 ம் ஆண்டு விஜய் தொலைக்காட்ச்சியில் ”பிக் பாஸ் 3”ல் போட்டியாளராக பங்கேற்றார்.

இந்நிலையில் சேரன் எனக்கு மிகவும் பிடித்த இயக்குனர்களில் ஒருவர் என்று மாரிமுத்து கூறியுள்ளார். மாரிமுத்து இயக்குனரும் நடிகர் ஆவார். தற்போது சன் டிவியின் ஒளிபரப்பாகும் ”எதிர்நீச்சல்” என்னும் தொடரில் நடித்து வருகிறார். இவருடன் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தமிழ் சினிமாவில் ஸ்கிரிப்ட் எழுதுவதில் திறமை வாய்ந்த இயக்குனர் ”சேரன்” என்று தெரிவித்துள்ளார். அவர் இயக்கிய அனைத்து படங்களும் தரமான படங்களாக அமைந்திருக்கும் என்று கூறியுள்ளார்.

Published by
Sathish G