Categories: Cinema History Cinema News latest news

பாலசந்தரோ? பாரதிராஜாவோ இல்லங்க… கோலிவுட்டில் முதல் தேசிய விருது இயக்குனர் இவர்தான்..

தேசிய விருது பட்டியல் சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பல தரப்பில் இருந்தும் சர்ச்சைகள் ஒரு பக்கம் ஆதரவு ஒரு பக்கம் என குவிந்து வருகிறது. இந்த நிலையில் தமிழில் நடந்த அதே விஷயம் தற்போது தெலுங்கிலும் நடைபெற்றுள்ளது. இது பல தரப்பினரிடமும் ஆச்சரியத்தினை ஏற்படுத்தி இருக்கிறது.

தெலுங்கு தேசம் பல வருடமாக சூப்பர்ஹிட் நடிகர்களை கொண்டது. அவர்களை வழிபாடு செய்யாத குறையாக மக்கள் அவர்மீது பிரியங்களை வைத்திருந்தனர். என்.டி.ராமாராவுக்கு இருக்கும் ரசிகர்கள் இன்னமும் அவரின் படங்களை பார்ப்பதை மிஸ் செய்யவே மாட்டார்கள். ஆனால் அவருக்கு தேசிய விருது கிடைக்கவே இல்லை.

இதையும் படிங்க: ஒரு படத்துக்கு பல சம்பளம்!.. வடிவேலு செஞ்ச அட்ராசிட்டியில் கண்ணீர்விட்ட தயாரிப்பாளர்கள்…

புஷ்பா படத்திற்காக 2023ல் அறிவிக்கப்பட்டுள்ள சிறந்த முதல் தேசிய விருது நடிகராகி இருக்கிறார் அல்லு அர்ஜூன். அவரை பலர் புகழ்ந்தாலும், அவரின் புஷ்பா படத்தால் தான் தற்போது எக்கசக்க பிரச்னை கிளம்பி இருக்கிறது. அப்படம் சந்தன மரத்தினை கதையை அடிப்படையாக கொண்டது. ஒரு குற்றத்தினை மையமாக கொண்ட படத்திற்கா தேசிய விருது இது காசு கொடுத்து வாங்கப்பட்டுள்ளதா என்றும் கேள்விகள் எழுந்துள்ளது.

இந்த நேரத்தில் தமிழில் கூட இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதாவது தமிழுக்கு சிறந்த தேசிய விருது இயக்குனர் யார் எனக் கேள்வி எழுப்பினால் பலர் புகழ்பெற்ற இயக்குனர்களின் பெயரையே முதலில் சொல்லக்கூடும். ஆனால் அவர்கள் யாருமே தேசிய விருதினை வாங்கவே இல்லை என்றால் நம்ப முடிகிறதா?

இதையும் படிங்க: மாமனார் மாதிரி இருப்பார்னு பாத்தா இது வேற மாதிரி!.. சிவ்ராஜ்குமாருக்கு பேட் பீலிங்ஸ் கொடுத்த தனுஷ்!…

தன்னுடைய மூன்றாவது படத்திலே 1996ம் ஆண்டு தேசிய விருதினை வாங்கிய தமிழுக்கான முதல் இயக்குனரானவர் அகத்தியன் தான். அதற்கு முன்னர் திரையுலகில் பிரபல இயக்குனர்களாக இருந்த பாலசந்தரோ, பாலுமகேந்திராவோ, பாரதி ராஜாவோ தேசிய விருதினை வாங்கவே இல்லை. 

தமிழுக்கு தேசிய விருது கிடைத்தே 25 வருடங்கள் மட்டுமே ஆகிறது. அவருக்கு பின்னர் மணிகண்டன், வெற்றிமாறன் உள்ளிட்ட பலர் வாங்கிவிட்டாலும் அதற்குமுன்னர், சிறந்த இயக்குனர்களாக கூறப்பட்ட யாருக்குமே விருது கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Published by
Akhilan