More
Categories: Cinema History Cinema News latest news

கமலின் வேலுநாயக்கர் இன்ஸ்பிரேஷன் இந்த அரசியல் பிரமுகர் தானா? யாருக்கும் தெரியாத சீக்ரெட்டினை உடைத்த பிரபலம்…

தமிழ் சினிமாவில் கதையின் நாயகன் என்றால் அது கண்டிப்பாக உலகநாயகன் பேரை தான் பலருக்கும் நியாபகம் வரும். அந்த வகையில் கமலின் திரைப்பட்டியலில் முக்கிய இடத்தினை பிடித்த படம் தான் நாயகன். இந்த படத்தில் அவர் நடித்திருந்த வேலு நாயக்கர் கதாபாத்திரம் ஒரு அரசியல் பிரமுகரின் இன்ஸ்பிரேஷன் என்றால் நம்பமுடிகிறதா?

மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிப்பில் 1987ம் ஆண்டு வெளிவந்த படம் தான் நாயகன். இப்படத்தில் சரண்யா, டெல்லி கணேஷ் என பலரும் நடித்திருந்தனர். இளையராஜா படத்திற்கு இசையமைப்பு செய்திருந்தார். அடுத்த வருடமே ஆஸ்காருக்கு இந்தியா சார்ப்பில் பரிந்துரைக்கப்பட்டது.

Advertising
Advertising

இதையும் படிங்க: கூரையை பிச்சுக்கிட்டு கொடுத்தாலும் இந்த ஆசை மட்டும் அடங்காது! விடாமல் லோகேஷை டார்ச்சர் செய்யும் விஜய்சேதுபதி

இப்படத்தில் கமல் சொல்லும் வசனமெல்லாம் அக்மார்க் ரகம். 36 வருடத்தினை கடந்தும் இன்னும் இந்த வசனங்கள் இளைஞர்கள் மத்தியில் பிரபலமாகவே இருக்கிறது. இளைஞர் முதல் வயதான தோற்றம் என படத்தில் பல வருடம் கதையாக சொல்லப்பட்டு இருக்கும். இதில் 60 வயதுக்கு மேற்பட்ட தோற்றத்தில் கமல் நடித்திருந்த வேலு நாயக்கர் கதாபாத்திரத்திற்கு ஒரு இன்ஸ்பிரேஷன் இருந்ததாம்.

திமுக பிரமுகரும், முன்னாள் முதல்வர் கருணாநிதி நண்பராக இருந்த பொதுச்செயலாளரான க.அன்பழகனை தான் வேலு நாயக்கருக்கு கமல் இன்ஸ்பிரேஷனாக பயன்படுத்தி இருந்தாராம். ஆனால் இதை கமல் தன்னுடைய படக்குழுவிடமே சொல்லிக் கொள்ளாமல் நடித்து முடித்து இருக்கிறார்.

இதையும் படிங்க: மதுரையில் லியோ ஆடியோ ரிலீசா?… ஆத்தி ஆளை விடுங்க.. வெளிநாட்டுக்கு மாத்துங்க… அந்தர்பல்டி அடித்த விஜய்

ஆனால் பல வருடமாக சினிமாவில் இருக்கும் எம்.எஸ்.பாஸ்கர் இந்த விஷயத்தினை சரியாக கண்டுப்பிடித்து கமலிடமே கேட்டு இருக்கிறார். அப்போது கமலும் ஆமாம் அவரினை மனதில் வைத்து தான் இந்த கதாபாத்திரத்தில் நடித்ததாக தெரிவித்து இருக்கிறார்.

கமலுக்கு ஆஸ்கார் விருது இந்த படத்திற்கு கிடைக்கவில்லை என்றாலும் வேலுநாயக்கருக்கு பிறகு அவரை ஆஸ்கார் நாயகன் என்றே பலராலும் அழைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Akhilan

Recent Posts