Connect with us

Cinema History

ஒரே நேரத்தில் 34 திரைப்படம்… கமலின் வாழ்க்கையே மாற்றிய தருணம்.. யார் அந்த ஹிட் கோலிவுட் ஹீரோ?…

Kollywood Hero: தற்போது கோலிவுட்டில் இருக்கும் நடிகர்கள் எல்லாருமே ஒரு கட்டத்தில் தயாரிப்பாளர்களை கஷ்டத்தில் தள்ளுவதையே வழக்கமாக்கி இருக்கின்றனர். ஆனால் ஒரே நேரத்தில் கிட்டத்தட்ட 34 படங்களில் நடித்தவர். ஒரே நாளில் 2ல் இருந்து 3 பட ஷூட்டிங்கில் கலந்து கொண்ட நடிகர். கோலிவுட்டில் அப்படி ஒரு ஆள் இருந்து இருக்கிறார்.

தமிழ் சினிமாவின் ஜேம்ஸ் பாண்ட் என்ற வார்த்தைக்கு அசலான உருவமாக இருந்தவர் தான் நடிகர் ஜெய்சங்கர். ஜெய்சங்கர் தன்னை தேடி எக்கசக்க தயாரிப்பாளர்கள் வந்தாலும் அவர் தன்னை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் ஜோசப்பை தேடி செல்கிறார். 

இதையும் படிங்க: பாட்ஷா பாரு பாட்டுக்கு 10% ஈடாகுமா லியோ செகண்ட் சிங்கிள்!.. பதிலடி கொடுக்க ரெடியான ரஜினி ரசிகர்கள்!..

ஆனால் அவரோ எனக்கு எல்லாம் இருக்கு. எனக்கு எதுவும் நீ செய்ய வேண்டும் என நினைத்தால் கருணை இல்லத்துக்கு எதுவும் செய் என்றாராம். அவர் சொன்ன வார்த்தைக்காக கடைசி வரை தன்னால் முடிந்த அனைத்து இல்லத்துக்கு சென்று உதவிகளை வழங்கி வந்தார்.

இவரின் நண்பரும் வியட்நாம் வீடு சுந்தரம் ஒருமுறை தன்னுடைய மனைவியின் மருத்துவ செலவுக்கு தயங்கி தயங்கி பணம் கேட்கிறார். ஆனால் ஜெய்சங்கர் தன்னுடைய உதவியாளரிடம் வாசலில் இருக்கும் தயாரிப்பாளரை கூப்பிட்டு வா எனச் சொல்லி அனுப்புகிறார்.

உள்ளே வந்தவரிடம் என்னை உங்க படத்தில நடிக்க சொல்லுறீங்க? நான் நடிக்கிறேன். ஆனால் சுந்தரம் தான் வசனம் எழுதணும் என்கிறார். அந்த தயாரிப்பாளரும் உடனே ஓகே சொல்லி 20 ஆயிரத்தினை அட்வான்ஸாக கொடுக்கிறார். அதை வாங்கி மருத்துவமனையில் கட்ட வந்தால் ஜெய்சங்கர் ஏற்கனவே கட்டிவிட்டதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: ரஜினியே நம்பாத இரண்டு படங்களை மெகா ஹிட் ஆக்கிய 2 பேர்!.. அட இது அவரே சொன்னதுதான்!..

வாலிப பருவத்தில் இருந்த கமல்ஹாசன் வாய்ப்பு இல்லாமல் ரொம்பவே தடுமாறி இருக்கிறார். அதனால் நடன இயக்குனருடன் சேர்ந்து உதவியாளராக இருந்தாராம். அவரை அழைத்த ஜெய்சங்கர் இப்படியே எத்தனை நாள் இருப்ப, நீ நடிகனாக வேண்டியவன் என அட்வைஸ் செய்து தன்னுடைய படத்தில் அவர் நடனத்தினை இணைக்க செய்தவர்.

கார் போக முடியாத சந்தில் எல்லாம் நடந்து சென்று தன்னுடைய ரசிகர்களை சந்தித்தவர். பிரபலமாக இருந்த போதிலும் அவர் வீட்டு கதவிற்கு செக்குரிட்டி எல்லாம் இருந்தது இல்லை. யார் வேண்டும் என்றாலும் எந்த நேரத்திலும் சந்திக்கலாம் என்ற நிலையே இருந்தது.

google news
Continue Reading

More in Cinema History

To Top